“அவளுக்கு வீடு இல்லை தாத்தா ஹாஸ்டல்ல வளர்ந்தவ”
“என்னடா சொல்ற அப்ப அவளோட அப்பா அம்மா”
“குழந்தையில்லதவங்க அவளை தத்து எடுத்து 5 வயசு வரைக்கும் வளர்த்திருக்காங்க. அப்புறம் அவங்களுக்கு குழந்தை பிறக்கவும் இவளை கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க. அவள் தனியாவே இத்தனை வருஷமா வாழ்ந்திருக்கா, அவளை என்னால விடமுடியாது. இப்ப நானும் இல்லைன்னா அவள் உடைஞ்சிப் போயிடுவா இல்லை தற்கொலை பண்ணிக்குவா”
“ஓ சரி சரி ம் என்ன செய்யலாம் பேசாம இந்த ஊர்ல ஹாஸ்டல்ல தங்க வைச்சா என்ன”
“விக்ரமை என்னால நம்ப முடியலை அதை விட சரண்யாவை நம்பி கீர்த்தனாவை தனியா விடமுடியாதே அவள் எப்படியெல்லாம் பேசிட்டு போனாள்ன்னு நீங்க பார்த்தீங்கள்ல”
“ஆமாம் பார்த்தேன் அவள் விட்டா கீர்த்தனாவை விரட்டிடுவா போல இருக்கே”
“ஆமாம் தாத்தா அந்த ஹாஸ்டல் கட்டறதுக்காக வந்த பிரச்சனை இது, டீலிங் முடிஞ்சி கையெழுத்தான பின்னாடி இப்படி லவ்வுன்னு சொல்றா சரண்யா. ஏதாவது நாம செஞ்சா உடனே அந்த டீலிங்கை கேன்சல் பண்ணிடுவேன்னு சொல்வா போல”
“சொன்னா சொல்லிக்கட்டும் விடுடா, அந்த ஹாஸ்டல இல்லைன்னா போகுது நான் வீட்ல எல்லார்கிட்டயும் பேசிக்கறேன்”
“பஞ்சாயத்து வைச்சாள்னா”
“எப்படி வைப்பா நீ ஒண்ணும் அவள் பின்னாடி சுத்தி லவ் கிவ்வுன்னு அலையலையே, அப்புறம் என்ன?”
“ஆனா அவளால கண்டிப்பா பிரச்சனை வரும்னு மட்டும் தோணுது தாத்தா எனக்கு” என
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 16 of 36