“முக்கியமான விசயம் ”
“என்ன விசயம் மாமா” என பவி கேட்க அவளை முறைத்தான்
”எத்தனை முறை சொல்றது இப்படி என்னை மாமான்னு கூப்பிடாதன்னு நான் உன்னை என் தங்கச்சியாதான் பார்க்கறேன் புரியுதா தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத” என கத்த விக்ரம் அதிர்ந்தான், பவியின் கண்கள் கலங்க
”நான் ஏன் உன் மேல ஆசைப்படக்கூடாதா மாமா”
“கூடாது” என கத்தவும் விக்ரம்
”அண்ணா அவள் சின்ன பொண்ணுன்னா”
“நீ பேசாத அவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்க போ ரெண்டு பேருக்கும் தாத்தா பல விசயங்கள் சொல்லனுமாம் விசயத்தை கேட்டபின்னாடி நீங்க என்கிட்ட பேசினா சரி பேசலைன்னாலும் சரி ஆனா ஒண்ணு உன் தங்கச்சியை இப்படி என்கிட்ட நடந்துக்க வேணாம்னு எடுத்து சொல்லு, அப்புறம் நீ விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி அடைய நினைக்காத” என சொல்ல
”யாரைண்ணா சொல்றீங்க நான் யாரை கட்டாயப்படுத்தினேன்” என சொல்லும் போதே லக்கேஜூடன் வெளிய வந்து நின்ற கீர்த்தனாவைக் கண்டு அதிர்ந்தான் விக்ரம்
“கீர்த்தி நீ எங்க போற” என கேட்க தாஸ் விக்ரமிடம்
”நான் உன்னைப்பத்தி சொல்லிட்டேன்” என சைகை செய்ய தாஸ் மீது கோபப்பட்டான் விக்ரம்
”உன்னை யார் சொல்ல சொன்னது” என கத்த தேவாவோ
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 19 of 36