(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


“கட்டாயப்படுத்தினா உனக்கு எதுவும் கிடைக்காது, இந்த வீட்ல இருந்த நாளெல்லாம் நீ சந்தோஷமா இருந்தல்ல, அதை நினைச்சிப் பாரு தேவாவை விட்டுடு, அவன் தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துட்டான் அவன் வாழ்க்கைத்தான் எனக்கு முக்கியம்”
   
“அப்ப நானு” என அவள் கோபமாக கேட்க
   
”நீ கேட்கறதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலை, உனக்குத் தேவை இதைப் போல குடும்பம்னா தாராளமா இந்த வீட்ல இருக்கற வேறாரு பையனை நீ கல்யாணம் பண்ணிக்கலாம்”
   
“முடியாது எனக்கு தேவாதான் வேணும்” என சொல்ல தாத்தாவோ
   
”இதப்பாரும்மா நீ சின்ன பொண்ணு, முதல்ல நீ கிளம்பு, பெரியவங்க பார்க்கற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க கிளம்பு” என சொல்ல அவளோ கைலாசநாதனைப் பார்த்தாள்
   
”அங்கிள் நீங்களுமா“
   
“இதப்பாரும்மா உன் அப்பா உன்னை பத்திரமா பார்த்துக்க சொன்னாரு. நானும் பார்த்துக்கிட்டேன், நீ இப்படி காதல் கல்யாணம்னு சொன்னா அது எனக்கும் உன் அப்பாக்கும் நடுவில பிரச்சனை வரும்”
   
“ஏன் வரும் என்னை நீங்க மருமகளா ஏத்துக்கறதால இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல புது உறவுதான் வரும்”
   
“ஆனா தேவா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்துட்டானே”
   
“இன்னும் கல்யாணம் ஆகலையே” என அவள் கோபமாக சொன்ன விதத்தில் அவரே அவளிடம்
   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.