(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

வைச்சிடனும்னுதான் ராப்பகலா வேலை செய்றேன், என்னோட கஷ்டத்துக்கான ஒரே ஆறுதல் நீதான், உனக்கு யாருமில்லை, நீ தனியாளு, நான் உன்னை கல்யாணம் பண்ணி உனக்கு ஒரு துணையா ஆறுதல் தரலாம்னு இருந்தேன். இப்பவும் சொல்றேன் பவிக்கு கல்யாணம் பண்ணிட்டு உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன் தெரியுமா 
   
எனக்கு சம்பளம் குறைவா வந்தாலும் உன்னை நான் மகாராணி போல பார்த்துக்குவேன், என் வீட்ல பாட்டியை தவிர வேற யாரும் இல்லை. உனக்கு மாமியார் பிரச்சனை கிடையாது, பவி உன் ப்ரெண்ட்டுங்கறதால அவளாலயும் உனக்கு பிரச்சனை வராது ப்ளீஸ் கீர்த்தனா உன் வாழ்க்கையை நீ கெடுத்துக்காத, அந்த தேவா அவன் வீட்ல என்னென்ன பிரச்சனை ஓடுது தெரியுமா உனக்கு, அவனை அந்த வீட்ல யாருமே மதிக்கறதில்ல. அவனுக்கு அந்த வீட்லயே முறைப்பொண்ணுங்க இருக்காங்க அவங்கள்ல ஒருத்தியை அவன் கல்யாணம் பண்ணிக்குவான். 
   
நீ அழகாயிருக்கறதால அவன் உன்னை பார்த்தான், பிடிச்சிருந்திருக்கும் அது லவ் கிடையாது என்னோடதுதான் உண்மையான காதல், ஆத்மார்த்தமான காதல், என்னை நம்பு, தேவாவை உனக்கு எத்தனை நாளா தெரியும், நாலு நாள்தானே ஆனா என்னை 5 வருஷமா தெரியும், என்னைப்பத்தி பவி உன்கிட்ட நல்லவிதமாதானே சொன்னா அப்ப நீ என்னை விரும்பலையா
   
கீர்த்தனா நான் செய்ற வேலை உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு, வேற வேலைக்கு போறேன், இந்த ஊரு பிடிக்கலையா சொல்லு, உனக்காக எங்க வேணும்னாலும் நான் வருவேன், நீ கேட்கறதெல்லாம் நான் செஞ்சித்தருவேன். ஆனா இதையெல்லாம் தேவா செய்ய மாட்டான் அவனை நீ நம்பாத” என சொல்ல கீர்த்தனா
   
”5 வருஷம் முன்னாடி நான் உங்களை பவியோட அண்ணாவாதான் பார்த்தேன்.  அவளோட அண்ணா எனக்கும் அண்ணாங்கற முறையிலதான் தைரியமா உங்க வீட்ல நான் 4 நாள் தங்கினேன், ஆனா உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த ஊருக்கே வந்திருக்க மாட்டேன். அப்புறம் நீங்க சொன்ன வேலை, வசதி அதெல்லாம் எனக்கு எதுக்கு? எனக்குத் தேவை என்னை உயிருக்குயிரா விரும்பறவருதான் அது தேவா மட்டும்தான் நீங்க இல்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.