(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


   
“நானும் உன்னை உயிருக்குயிரா விரும்புவேன்”
   
“இல்லை எனக்கு தேவாவைத்தான் பிடிச்சிருக்கு” என சொல்ல விக்ரமோ
   
”அவன் உன்னை ஏமாத்தறான், அவனை நம்பாத, அவனை சுத்தி எப்பவும் பொண்ணுங்க இருப்பாங்க, பொண்ணுங்களோட பழகி அவங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டா தன் பேச்சை கேட்பாங்கன்னு அவனுக்குத் தெரியும், அதுபடி செஞ்சி உன்னை ஏமாத்தறான், அவனோடது உண்மையான லவ்வே கிடையாது, நீ லவ்வுன்னு நினைக்கற வேணா பாரு அவன் உன்னை கல்யாணமே செஞ்சிக்க மாட்டான். அவனுக்கு குடும்பம்தான் முக்கியம், அவன் பாட்டி ஒரு வார்த்தை சொன்னா உன்னையே விட்டுடுவான் கடைசியில நீ தெருவிலதான் நிக்கனும்” என அவன் பேச பேச தாமரைக்கு கோபமே வந்தது
   
”போதும் நிறுத்துடா இனி ஒரு வார்த்தை பேசாத, அப்படி அவள் தெருவில நிக்கற மாதிரியிருந்தா அப்ப நீ வந்து அவளை கூட்டிட்டு போ, நான் இருக்கறவரைக்கும் உன் எண்ணம் பலிக்காது எனக்கு தேவாவை தெரியும், அவனோட தாத்தாவை பத்தி நல்லாவே தெரியும், தேவா ஒரு நாளும் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டான். ஏமாத்தவும்  மாட்டான். பொண்ணுக்கே உன்னை பிடிக்காதப்ப இங்க வந்து நின்னு ஏன் கத்தற கிளம்பு போ இனி இங்க வராத” என கத்த 
   
”கீர்த்தி நான் பெரியாளாகி உன்னைத் தேடி வருவேன், நிச்சயம் நான் வருவேன், அப்ப உன்னை கூட்டிட்டு போயிடுவேன் யாரும் தடுக்க மாட்டாங்க தேவாவும் தடுக்கமுடியாது” என சொல்ல தாமரைக்கு கோபமே வந்தது தன் வாழ்க்கை போல அப்படியே கீர்த்தனாவிற்கு நடக்கிறதே என நினைத்தவர்
   
”நீயெல்லாம் ஒரு மனுசனா, தேவா உன்னோட நண்பன், உன் நண்பனோட வாழ்க்கை அழியனும்னு நினைக்கிறியே நீ ஒரு ஆளு, இதப்பாரு நீ பெரியாளாவே வந்தாலும் கீர்த்தனாவை நான் தேவாவுக்குதான் கல்யாணம் பண்ணி வைப்பேன். அப்ப தேவா பிச்சையே எடுத்தாலும் சரி, அதுக்காக கீர்த்தனா ஒதுங்க மாட்டா, இதப்பாரு விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க நினைச்சிடாத, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.