(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“ஆனா தேவா இருப்பானே”

   

“அவனை பார்த்துக்க சரண்யா இருக்காளே”

   

“அப்ப பவி என் தங்கச்சி அவளோட காதல் என்னாகிறது”

   

“அவள் சின்ன பொண்ணு, தேவாவுக்கு செட்டாக மாட்டா”

   

“ஆனா அவள் அவனை உயிருக்குயிரா விரும்பறாளே”

   

“ஆமா உன் தங்கச்சி ப்ரெண்ட்தானே என் பேத்தி மித்ரா”

   

“ஆமாம்”

   

“அப்ப சரி உன் தங்கச்சியை என் வீட்ல விட்டு வை பார்க்கலாம், 2 பொண்ணுங்கள்ல யாரு சாமர்த்தியமா நடந்து தேவாவை கைப்பிடிக்கறாங்கன்னு பவியா இல்லை சரண்யாவான்னு. இதுல கீர்த்தனா வெளிய வந்தா உனக்கு லாபம், தேவாவுக்கு ரெண்டு பக்கமும் பவியும் சரண்யாவையும் விடு, முதல்ல அவன் வாழ்க்கையை மாத்தனும் இப்ப அவன் ஹாஸ்டல் கட்டப் போறேன் அது இதுன்னு ஆடறான், அது ஒரு நாளும் நடக்க கூடாது. அவன்  பெரியாளாயிட்டான்னா உன்னால அவனை வீழ்த்த முடியாது. அந்த ஹாஸ்டல் ப்ராஜெக்ட் சரண்யாதானே செஞ்சா, அவளே செய்யட்டும் தேவா கீர்த்தனாவை வைச்சி ஹாஸ்டல் கட்ட முயற்சி செய்றான், அது நடக்கவே கூடாது சரியா அதை தடுக்கனும்” என சொல்ல விக்ரம் உடனே தலையாட்டி அவசரமாக வெளியே சென்றான்.

   

அவன் நேரம் 1 மணி நேரத்தில் சரண்யாவின் நெம்பர் கிடைத்து அவளிடம் பேசி தன் திட்டத்தைக் கூற அவளும் அதற்கு ஒப்புக் கொண்டாள்

   

”சரி பார்க்கலாம் நான் அந்த ஹாஸ்டல் கட்டறத தேவாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ என்கூட இரு, உனக்கு கீர்த்தனா கிடைப்பா, எனக்கு தேவா கிடைப்பான்” என சொல்ல பவியை பற்றி சரண்யாவுக்கு தெரியாமல் போனது விக்ரமுக்கு வசதியாகிப் போனது. 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.