(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அவனை இழுத்துக் கொண்டு தாமரை வீட்டுக்கு முன் சென்று நின்று கத்தினான் தேவா

   

”சுந்தரம் சுந்தரம் தாமரை தாமரை” என கத்த அந்நேரம் வீட்டில் அனைவரும் இருந்தபடியால் அனைவருமே வெளியே வந்தார்கள். அதில் தாமரையோ 

   

”தேவா என்னாச்சி கீர்த்தனா கிடைச்சாளா”

   

“கீர்த்தனா தானே அவள் கிடைச்சிடுவா, நான் பார்த்துக்குவேன் ஆனா இதுக்கு காரணமா இருந்தவனை வெட்டிப்போட வந்தேன் எங்க உன் புருஷன்” என கேட்க

   

”அவரை ஏன் கேட்கற?”

   

“எதுக்கா இரு” என சொல்லி விக்ரமனது கன்னத்தில் பளார் என அடிக்க அவன் உடனே உண்மையை உளற உறைந்தேவிட்டார் தாமரை

   

அந்நேரம் அங்கு வந்த சுந்தரமோ தேவாவைக் கண்டு சிரித்தார்

   

”நான்தான் சொன்னேனே தேவா, காதலிக்கறவங்க எல்லாருக்குமே கல்யாணம் ஆகறதில்லைன்னு” என சொல்ல விக்ரமோ

   

”நான் என்ன பாவம் பண்ணேன், கீர்த்தனாவை எனக்கு கிடைக்காம செஞ்சிட்டீங்களே”

   

“ஏன்டா உன்கிட்ட என்ன இருக்கு, அவளை கல்யாணம் பண்ணி உன்னால வாழமுடியுமா, நீ ஒரு கோழை உனக்கு அவள் கிடைச்சாலும் வேஸ்ட்தான்” என சொல்ல தேவாவோ

   

”கீர்த்தனா எங்க?”

   

“தெரியாது”

   

“பொய் சொல்றீங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.