வர தேவா விலகி காருக்குள் ஏறி காரை ஓட்டிக்கொண்டு சென்றே விட்டான் தேவா, அவன் செல்வதைக் கண்டதும் திருப்திப்பட்ட வைத்தி கோபத்துடன் சுந்தரத்தை பிடித்தார்
”டேய் சுந்தரம் அன்னிக்கு என்கிட்டயிருந்து அவளை பிரிச்சல்ல, இன்னிக்கு பாரு உனக்கே அவள் சொந்தமில்லைடா” என சொல்ல சுந்தரமோ
”என்ன ஆனாலும் சரி தாமரையை நான் விடமாட்டேன்” என அவர் கத்த அங்கு நடந்த சண்டையால் யாரோ போலீசுக்கு தகவல் தர போலீஸ் அனைவரையும் கைது செய்தது.
போலீஸ் ஸ்டேஷனில் சுந்தரம் தேவா மீது புகார் அளிக்க சுந்தரத்தின் மீது வைத்தியநாதன் புகார் அளித்தார்
”சார் என் பொண்டாட்டியை அந்த தேவா கடத்திட்டு போறான் சார்” என சுந்தரம் சொல்ல வைத்தியோ
”சார் என் வீட்டு மருமகளை இந்த சுந்தரத்தோட வீட்ல பத்திரமா வைச்சிருந்தோம், இப்ப அவளை காணலை சார், இவன்தான் காரணம் இவன்தான் அவளை எங்கேயோ ஒளிச்சி வைச்சிருக்கான் அவளை கண்டுபிடிங்க சார்” என புகார் அளிக்க போலீசுக்கு தலையே சுற்றியது. வித்தியாசமான இந்த செய்தியை கேட்ட பேப்பர்காரர்கள் உடனே இந்த செய்தியை அடுத்த நாள் நியூஸ் பேப்பரில் முதல் பக்கத்தில் பிரசுரித்தார்கள்.
காதலி காணாமல் போனதால் மனம் உடைந்து 58 வயது பாட்டியை கடத்திய காதலன். காதலனையும் அந்த காதலியையும் போலீஸ் வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள். பாட்டியின் நிலைமை என்ன ஆனது கேள்விக்குறியாக உள்ளது என பிரசுரித்தார்கள்.
அந்த செய்தித்தாளை படித்த தேவாவோ காரில் இருந்த தாமரையிடம்
“தாமரை பார்த்தியா உன் புருஷன் பண்ண வேலையை, போட்டோதான் தரலை மத்தப்படி எல்லாம் போட்டாச்சி இதுல அந்தாளு பண்ண தப்பு இல்லையே தாமரை”
Next episode pls