(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“இல்லை பாட்டி நீங்க அப்படி கேட்கவும் நான் உண்மையை சொல்ல நினைச்சேன் ஆனா, அப்ப இந்த ஹாஸ்டல் வேலை நினைவுக்கு வரவும் சரி சும்மா பொண்ணு பார்க்கற மாதிரி பார்த்துட்டு முடியாதுன்னு சொல்லி ஒதுங்கிடலாம், நான் போட்ட வேஷம் அப்படியே இருக்கட்டும் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி வேலையை முடிச்சிட்டு போயிடலாம்னு நினைச்சேன் ஆனா தேவா வந்து கத்தினதாலதான் இவ்ளோ பிரச்சனையும் வந்துச்சி” என தேவா மீது பழி போட பாட்டிக்கு கோபமே வந்தது. அதற்குள் தாத்தா வந்து பாட்டியின் கோபத்தைக் குறைக்க எண்ணி

   

”கோசலை விடு எல்லாரும் போங்க இங்கிருந்து கிளம்புங்க, கைலாசம் இந்த பொண்ணை கூட்டிட்டு போய் சென்னையில அவள் வீட்ல விட்டுட்டு வா திரும்பி பாதி வழியில இறங்கி வந்து நிக்கப் போறா புரியுதா”

   

“புரியுதுப்பா” என சொல்ல அடுத்து தேவாவிடம்

   

”தேவா உனக்கு இவளைப்பத்தின உண்மை தெரிஞ்சிருந்தும் நீ ஏன் சொல்லலை”

   

“எனக்கு சின்னதா சந்தேகம் இருந்துச்சி தாத்தா ஆனா அதை உறதிப்படுத்த ஆதாரம் இல்லை.  நான் இந்த சரணுக்கு கல்யாணம் அது இதுன்னு பேச்சு எடுத்தேன், அப்ப அப்பாவும் இருந்தாரு. அவளும் இருந்தா அப்ப கூட நான் சரண்யான்னு ஒரு வார்த்தை சொல்லலை சரி எப்படியாவது அவளோட அசல் உருவம் வெளிய தெரியும்னு விட்டேன். ஆனா நீங்களாவது என்கிட்ட இப்படி வீட்ல ஒரு பங்க்ஷன் நடக்கப் போகுதுன்னு சொன்னீங்களா, பட படன்னு எதையும் விசாரிக்காம நீங்களா ஏற்பாடு பண்ணிட்டு என் மேல பழிப்போடறீங்க, சரண்யா என்னடான்னா நான் வந்து கத்தினாதாலதான் பிரச்சனை ஆச்சி இல்லைன்னா நானே சரி பண்ணியிருப்பேங்கறா, நீங்க என்னடான்னா அவளை பத்தின உண்மை தெரிஞ்சதும் என்கிட்ட ஏன் சொல்லலைங்கறீங்க இதுல அந்த ஹாஸ்டல் கட்டறதுக்காக என்னை  வீட்டை விட்டு போகற அளவுக்கு கட்டாயப்படுத்தினீங்க ஆக மொத்தம் நான்தான் எல்லாத்துக்கும் காரணம் 

   

அதோ அவள் பொய் சொன்னது, வேஷம் போட்டது, யார்கிட்டயும் உண்மையை சொல்லாம மறைச்சது, அதெல்லாம் உங்களுக்குத் தப்பா தெரியாதே, இப்ப கூட என்னைத்தான் தப்பு 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.