”ஆமாம் நான் இருக்கேன் நீ பயப்படாத” என சொல்ல தேவாவோ
”யோவ் டாக்டர், இப்படி நீ சொன்னதை கேட்டுதான் நான் கீர்த்தனாவை உன் வீட்ல விட்டுப் போனேன், நீ அந்த விக்ரம் கூட சேர்ந்து என் முதுகுல குத்திட்டல்ல, அது சரி நீ அந்த காலத்திலயே என் தாத்தா முதுகுல குத்தினவனாச்சே உன்னையெல்லாம் மனுசன் நம்புவானா தாமரை புருஷன்ங்கறதால உசுரோட விடறேன் போ இங்கிருந்து” என கத்த தாமரையும் சுந்தரத்திடம்
”யார் சந்தோஷமா இருந்தாலும் உங்களுக்குப் பிடிக்காதே, தேவா கீர்த்தனாவை காதலிக்கற விசயம் தெரிஞ்சும் எதுக்காக விக்ரமுக்கு உதவி செஞ்சீங்க” என கேட்க அவரோ
”தேவாவுக்கு சுத்திலும் ஏகப்பட்ட பிரச்சனை, பவி, விக்ரம், சரண்யா, அவன் வீட்லயே ஆயிரம் குழப்பம், அதே விக்ரம் வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை அதனால அவங்களை ஒண்ணாக்கலாம்னு நினைச்சேன்” என அவர் பூசி மெழுக அதைக்கேட்டு இளக்காரமாகச் சிரித்த தாமரையோ
”நீங்க எந்த அர்த்தத்தில இதை செஞ்சீங்கன்னு எனக்குத் தெரியாதா போங்க இங்கிருந்து” என கத்தவும் அதோடு அங்கிருந்து இறங்கி சேரில் சென்று அமர்ந்துக் கொண்டார். கோயிலுக்கு வந்தவர்கள் கூட அங்கு தேவாவின் திருமணம் என்றதுமே தெரிந்தவர்களுக்கு போன் மூலம் சொல்லிவிட்டு திருமணத்தை காண அமர்ந்துவிட்டார்கள். அதில் போலீசுக்கும் யாரோ தகவல் சொல்ல அவர்களும் புறப்பட்டு வந்தார்கள்.
ஐயர் மந்திரம் முழங்க தாலி கட்டும் நேரம் வரும் போது போலீஸ் வந்து குதித்தது
”தேவா உன்னை அரஸ்ட் பண்றோம்” என கத்தவே தாத்தா உடனே அவர்களை சமாதானம் செய்ய தாமரையே அங்கு வந்தார்
”தேவா யாரையும் கடத்தலை. இதோ நான் இங்கதான் இருக்கேன். பொய்யா வழக்கு கொடுத்திருக்காங்க அவனை விட்டுடுங்க”