(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

ஒர்க்ஷாப் பத்திரம் ஏலத்தில எடுத்தது. அப்படியே வைச்சிருக்கேன் இதை அவன்ட்ட தரலாம்னு இருக்கேன்”

   

”நீ கொடுத்தா அவன் வாங்குவானா என்ன”

   

“நான் கல்யாணத்துக்கு மொய்யா தரேன்” என சொல்ல சரி வா என அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வர அங்கு சுந்தரம் கோபமாக காத்திருந்தார் 

   

”நீ இங்க என்ன செய்ற” என வைத்தி கத்த 

   

”என் பொண்டாட்டி எங்க” என சுந்தரம் கேட்க

   

”எனக்கு தெரியாது” என தாத்தா கத்த மறுபடியும் இருவருக்குள்ளும் சண்டை வந்துவிடுமோ என பயந்த கைலாசநாதனோ

   

”இதப்பாருங்க தேவாவுக்கு கல்யாணம் அதுக்காக நாங்க போறோம், நீங்களும் வாங்க அங்க உங்க பொண்டாட்டி இருந்தா கூட்டிட்டுப் போங்க இங்க நின்னு கத்தாதீங்க கிளம்புங்க” என ஒரே போடாக போட அவரும் சரியென அவர்களுடன் கிளம்பினார்.

   

இருவீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வேலையாட்கள் உள்பட கோயிலுக்குச் சென்றார்கள். அங்கு ஏற்கனவே தாஸ் அவர்களிடம் வேலை செய்தவர்களிடம் திருமணத்தைப்பற்றி சொல்லவே அவர்கள் இருந்து அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தார்கள். 

   

தேவா மணமகனாக தயாராகி தாத்தாவிற்காக காத்திருந்தான்

   

”இந்த தாத்தா ஒண்ணு, சொன்ன நேரத்துக்கு வராம என்னதான் செய்றாரோ” என திட்டிக் கொண்டிருக்க தாமரை அங்கு வந்தாள்

   

”அவரை ஏன்டா திட்டற வா வா அங்க ஐயர் கூப்பிடறாரு வா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.