(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“தாமரை நீ ஏன் இங்க வந்த, உன்னை கீர்த்தனாவை பார்த்துக்கும் படிதானே சொன்னேன், அறிவிருக்கா உனக்கு அவள் ஓடிட போறா”

   

“தாஸ் இருக்கான்டா அவள் கூட போதுமா நீ வா” என இழுத்துக் கொண்டு செல்ல கோயிலில் இருந்த மண்டபத்தில் போடப்பட்ட மணமேடையில் ஏறியவன் அங்கிருந்த மணப்பலகையில் அமர்ந்துக் கொண்டு முன்னாடி இருந்த ஐயர் சொல்ல சொல்ல சடங்குகளை செய்யலானான். எதிரில் அவனிடம் வேலை செய்த வேலையாட்கள், தெரிந்தவர்கள் அனைவரும் இருந்தார்கள். கோயில் எதிரே இருந்த ஓட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்யப்பட்டது. திருமணம் ஆனதும் அதே மண்டபத்தில் சாப்பாடு பரிமாற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டான் தாஸ்.

   

தாமரையோ கீர்த்தனாவை சென்று பார்த்தார். அழகாக ரெடியாகி கல்யாண பெண்ணாக மாறியிருந்தாலும் முகத்தில் இருந்த சோகம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது

   

”ஏன் சோகமா இருக்க?”

   

“தெரியலை ஏதோ பெரிய பிரச்சனை வரும் போல இருக்கு பாட்டி” என சொல்ல 

   

”நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன்” என சொல்லி அவளுக்கு சமாதானமாக 4 வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார்.

   

கோயிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு யாராவது வருகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்த தாஸோ தேவாவின் குடும்ப உறுப்பினர்கள் வரவும் அதிர்ந்தான். உடனே பின்னாடியே வந்த சுந்தரத்தின் குடும்பத்தையும் கண்டு குழம்பியவன் அவசரமாக தேவாவிடம் சொல்ல வந்தான்.

   

அங்கு அவன் பிசியாக மந்திரங்கள் சொல்லிக் கொண்டு இருப்பதால் தாமரை பாட்டியிடம் சென்று சொன்னான்.

   

அவரோ கீர்த்தனாவிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.