“பைத்தியம் இப்பதான் விலகியிருக்கு, நான் வரலை”
“அம்மா சொன்னாக்கேளு வா போலாம், இங்க இருக்கறது வேஸ்ட்” என 3வது மகன் சொல்ல
”உன் அப்பாகூட வாழ்ந்து என் வாழ்க்கைதான் வேஸ்ட்டா போச்சி, இனிமே நான் என் பேரன் பேத்தியோட வாழப்போறேன். கீர்த்தனாவுக்கு யாரும் இல்லை, அவளோட பாட்டியா நான் இருக்கப்போறேன் நீங்க போங்க” என கத்த அதற்குள் ஐயரோ
”அம்மா மணப்பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என கத்த தாமரை உடனே கீர்த்தனாவை அழைத்து வர சென்றார்.
சில நொடிகளில் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு வந்து மேடையில் அமர வைத்தார்
”பொண்ணோட அப்பா அம்மாவை கூப்பிடுங்க சடங்கு செய்யனும்”
“அப்பா அம்மா இல்லை அவளுக்கு நான்தான் எல்லாம் என் பேத்திதான் நான் என்ன செய்யனும் சொல்லுங்க”
“அப்படின்னா உங்க வீட்டுக்காரரை கூப்பிட்டு நில்லுங்க, பாத பூஜை செய்யனும்” என சொல்ல சுந்தரம் வேறு வழியின்றி மேடைக்கு ஏறி தாமரை பக்கம் நிற்கவே வைத்திக்கு கோபமே வந்தது. இருந்தாலும் பையன் சார்பாக தன் மகன் மற்றும் மருமகள் ஏறி நின்றுக் கொண்டதைக் கண்டு நிம்மதியாகி அங்கிருந்த சேர்களில் அமர்ந்துக் கொண்டார். இருபக்க பெரியவர்களுக்கான சடங்கு முடிந்து கன்னியாதானம் செய்த சுந்தரத்தைக் கண்டு கைகள் கூப்பி நன்றி சொன்னாள் கீர்த்தனா, அந்த ஒரு இடத்தில் அவளை தன் பேத்தியாகவே பாவித்தவர்
”எதுக்கு இப்படியெல்லாம் நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன் அழாதேம்மா” என தாமரை சொல்ல சுந்தரமும்