“ஆனா போலீஸ் கேஸ் இருக்கும்மா எப்ஐஆர் போட்டிருக்காங்களே அவனை அனுப்புங்க”
“அதான் நான் இருக்கேனே பின்ன எதுக்காக அவனை கூப்பிடனும், தாலி கட்டற நேரத்தில இப்படி செஞ்சா எப்படி ஆமா யார் உங்களுக்கு தகவல் சொன்னது”
“யாரோ போன்ல தகவல் சொன்னாங்க” என சொல்ல அங்கிருந்த அனைவரின் பார்வையும் சுந்தரத்தை பார்க்க அவரோ
”நான் யார்கிட்டயும் சொல்லலை” என அவர் அலற தாமரை அதை நம்ப மறுத்தார்
”கடைசி நேரத்தில கூட ஒரு காதல் ஜோடியை பிரிக்க துடிக்கறீங்களே, நீயெல்லாம் ஒரு மனுசனா” என திட்டிவிட்டு போலீசிடம் கைகூப்பி நின்றார்
”5 நிமிஷம்தான் தாலி கட்டினப்பின்னாடி நானே தேவாவை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வரேன், இப்ப கொஞ்ச நேரம் அமைதியா இருங்க இப்படி வந்து உட்காருங்க வாங்க” என சொல்லி அவர்களை எப்படியோ அமர வைத்துவிட்டார் தாமரை.
தாலி இருந்த தட்டு எடுத்துக் கொண்டு தேவாவின் மாமா பொண்ணு தாரா அங்கிருந்தவர்களிடம் சென்றாள்
”அட்சதை எடுத்துக்குங்க” என சொல்லி சொல்லி அனைவரிடம் நீட்ட அவர்களும் எடுத்துக் கொண்டார்கள். சுப்ரஜாவோ மேடைக்கு வந்து தேவாவின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டதும் தேவாவிற்கு நிம்மதியானது. என்னவோ அவள்தான் அவளை காப்பாற்றப் போகிறாள் என்பது போல ஒரு உணர்வு.
கடைசி வரிசை வரை தாரா அனைவரிடமும் சென்று முடிக்க சரண்யா தன் தாத்தாவுடன் சென்னை போலீசுடன் வரவே அதிர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
கைலாசமோ சரண்யாவின் தாத்தாவிடம்