(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”பாரு எல்லாரும் வந்திருக்காங்க பயப்படாத”

   

“அவங்க கல்யாணத்தை நிறுத்த வந்திருக்காங்க”

   

“அப்படியெல்லாம் இல்லை நான் இருக்கேன்ல, ஏன் பயப்படற அமைதியா இரு” என சொல்லி பயந்துக் கொண்டிருந்தவளை அமைதியாக்க அரும்பாடுபட்டார்.

   

மண்டபத்திற்குள் வந்த 2 குடும்பத்தையும் கண்டு நொந்துப் போனான் தேவா. அதிலும் சுந்தரத்தைக் கண்டு கொதித்து எழுந்து நின்றான்

   

”அங்கயே இருங்க யார் உங்களை கூப்பிட்டது” என கத்த சுந்தரமோ

   

”என் பொண்டாட்டி எங்க?” என கத்த தாமரை பாட்டியே அங்கு வந்து

   

”நான் இங்கதான் இருக்கேன்” என கத்தவும் அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அமைதியானார். அதற்குள் வைத்தியும் தாமரையைப் பார்த்து சிரிக்கவே அதைப் பார்த்த தாமரை அவரிடம் பேச வந்தாள்.  ஆசையாக வருபவளிடம் பேச வைத்தியும் செல்ல குறுக்க வந்தார் சுந்தரம்

   

”தாமரை வா போலாம்” என அவரது கையை பிடிக்க கையை உதறினார் பாட்டி

   

”நான் இனி உங்க கூட வாழ வரமாட்டேன்” என சொல்ல அவருக்கு திக்கென்றது. அவரது மகன்கள் வந்தார்கள்

   

”அம்மா என்னாச்சி உனக்கு, வா நம்ம வீட்டுக்கு போலாம்” என ஒருவன் சொல்ல

   

”நான் வரமாட்டேன்”

   

“என்னம்மா பைத்தியமா உனக்கு” என இன்னொரு மகன் பேச

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.