“எனக்கு சொந்தமா ஒரு காலியிடம் இருக்குல்ல, அந்த இடத்துக்கு நேராதான்”
“சரி சரி நாளைக்கு காலையில எத்தனை மணிக்கு வரனும்”
“காலையில 6 மணிக்கு வந்துடு, பொறுப்பா எல்லா வேலையும் நீதான் செய்யனும், முகூர்த்தம் 7 டூ 9 புரியுதா சொதப்பிடாத”
“இல்லைடா நான் வரேன்” என சொல்லி போனை வைக்கவும் தேவாவும் நிம்மதியாக ஓட்டல் திரும்பினான்.
தாத்தாவும் அடுத்த நாள் திருமணம் செல்வதற்காக தன் அறைக்கு சென்றவர் பட்டுவேட்டி, சட்டை ,நகைகள் என எடுத்து வைத்துக் கொண்டிருக்க அதைப்பார்த்த பாட்டி கோசலையோ
”என்ன விசேஷம் எங்க போறீங்க”
“நாளைக்கு ஒரு கல்யாணம் போகனும், அதான் எல்லாம் எடுத்து வைக்கிறேன்” என சொல்லியவர் அவர் பெயரில் இருந்த நிலத்துப் பத்திரங்களையும் எடுத்து வைக்கவே புரிந்துக் கொண்டவர்
”தேவாவுக்கு கல்யாணமா” என ஆசையாகக் கேட்க
அவரோ ஷ் என சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு
”ஆமாம்”
“நல்ல விசயம்தானே நாம எல்லாருமே போலாமே”
“சும்மாயிரு தேவா மேல போலீஸ் கேஸ் இருக்கு, தேவாவுக்கும் கீர்த்தனாவுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் நிம்மதி”