“சரிங்க அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், நாம ஒண்ணா போலாமே”
”நீ வந்தா எல்லாருக்கும் சந்தேகம் வரும்”
“ஏன் நான் வந்தா உங்களுக்கு கஷ்டமா, தாமரை இருக்காளேன்னு பார்க்கறீங்களா”
“தாமரையை பத்தி நீ பேசாத சரியா, அவளாவது தேவாவுக்கு துணையா நிக்கறா, நீ என்ன செஞ்ச”
“தப்புதான் விடுங்க நானும் கல்யாணத்துக்கு வரேன்” என சொல்ல அவர் போனா போகட்டும் என தலையாட்டினார்.
தாமரை வந்த விவரம் அவர் கடைகளுக்கு சென்றது, வந்தது என பார்த்தவர்கள் சுந்தரத்துக்கு தகவல் தரவே அவரின் மகன்கள் அவரை வலை வீசி தேடலானார்கள்.
விடிந்தது
காலையில் 6 மணிக்கு கல்யாணத்திற்கு போக ரெடியாகி வெளியே வந்த தாத்தாவோ அங்கு தன் குடும்பமே ரெடியாக இருப்பதைக் கண்டு அதிரந்தவர் அங்கிருந்த பாட்டியிடம்
”என்ன இது” என கேட்க
”நான் யாரையும் கூப்பிடலை, நான் பாட்டுக்கு ரெடியாகி வந்தேன் அவங்களா ரெடியானாங்க” என கூலாகச் சொல்ல தலையில் அடித்துக் கொண்டவர் கைலாசநாதனிடம்
”இதப்பாரு, தேவா கல்யாணத்தில நீ ஏதாவது குளறுபடி செஞ்ச, அப்புறம் இந்த வீட்ல உன்னை விடவே மாட்டேன் விரட்டிடுவேன்”
“அப்பா நான் ஏன் அப்படி செய்யனும் இங்க பாருங்க அவனோட ட்ரான்ஸ்போரட் மற்றும்