(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

பட்டுப்புடவையும், தேவாவிற்கு பட்டுவேட்டி சட்டையும் வாங்கிக் காண்டு காரில் ஏறி ஓட்டலில் சாப்பிட்டு அடுத்து ஜோசியரிடம் சென்று திருமணத்திற்கு நல்ல நாள் குறித்துக் கொண்டு ஓட்டலுக்குச் சென்றார்கள். அங்கு ஒரு நாள் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் விடிந்ததும் தாமரை கீர்த்தனாவை அறையில் விட்டுவிட்டு துணைக்கு தாஸை அமரவைத்தவர் தேவாவுடன் சாமான்கள் கடைக்குச் சென்றார்.

   

தேவையான வீட்டு சாமான்கள் மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் வரை அனைத்தையும் வாங்கிவிட்டார். புது வீட்டில் அனைத்து பொருட்களும் இறங்கியதும் 

   

”தேவா கேஸ்சிலிண்டர் இல்லாம எப்படி சமைக்கறது”

   

“நான் ஏற்பாடு செய்றேன் உனக்கேன் கஷ்டம் எப்ப பால் காய்ச்சற அதை சொல்லு”

   

“உன் கல்யாணம் முடிஞ்சி ஜோடியா இந்த வீட்டுக்கு வந்துடுங்க, கீர்த்தனா கையால பால் காய்ச்சிடறேன்”

   

”நாளைக்குதானே கல்யாணம் சரி சரி அதுக்குள்ள நான் சிலிண்டர்கேஸ்க்கு ஏற்பாடு செய்றேன்” என சொல்லி அவரை அழைத்துக் கொண்டு ஓட்டலில் விட்டுவிட்டு தாஸை அழைத்துக் கொண்டு நகை கடை, கேஸ்சிலிண்டர் அது இது என அலைய ஆரம்பித்தான் தேவா.

   

ஓட்டல் அறையில் கீர்த்தனாவோ

   

”எனக்கு இந்த கல்யாணம் வேணாம்” என சொல்ல பாட்டி திகைத்தார்

   

”சரி வேணாம் கல்யாணம் பண்ணாம என்ன செய்யலாம்ங்கற, வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னைப் போல வாழப்போறியா”

   

“இல்லை இல்லை”

   

“என்ன இல்லை இதப்பாரு இதுல குழம்ப ஒண்ணுமே இல்லை, என்னை போல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.