(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“நான் ஆசிரமத்துக்கு போறேன்” என கத்த தாமரையோ

   

”ஏன் என்ன விசயம் தேவா வந்துட்டான்ல, அவனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்து, உனக்கு அப்பா அம்மாதான் முக்கியமா அவங்க இறந்துட்டாங்கள்ல விட்டுடு, இதப்பாரு தேவா இருக்கான், தாஸ் உன் அண்ணன் ,அப்புறம் நான் இருக்கேன் உன் பாட்டி, வேற என்ன சொந்தம் வேணும் உனக்கு சொல்லு” என கேட்க அவளோ பயங்கரமாக யோசிக்கலானாள்

   

அவளை யோசிக்கவிட்டு, வண்டியை மதுரைக்குள் செலுத்தினான் தேவா.

   

அவனுக்கென்று இருந்த காலி இடத்திற்கு வந்து நிறுத்தினான்.

   

”இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த”

   

”தாமரை இந்த காலி இடம் என்னோடது, இங்க நான் வீடுகட்டலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற”

   

“நீ எப்ப கட்டறது நாம எங்க தங்கறது”

   

”பேசாம என் பண்ணை வீட்ல தங்க வைக்கவா”

   

“ஊருக்கு ஒதுக்குப்புறமா எங்களை தங்க வைச்சா, ஊர்ல நாலு பேர் நாலு விதமா கேவலமா பேசுவாங்க முடியாது போ” என தாமரை சொல்ல

   

“பக்கத்தில ஒரு வீடு காலியாயிருக்கு, அங்க தங்கிக்கலாம் இரு நான் போய் ஓனர்கிட்ட பேசிட்டு வரேன்” என சொல்லி காரை விட்டு இறங்கி வெளியே சென்று அந்த ஓனரிடம் பேசிவிட்டு அரை மணி நேரம் கழித்து திரும்பி வந்தான்

   

”தாமரை இந்த லைன்ல காலி வீடு இருக்காம் ஆனா சின்ன வீடு பரவாயில்லையா” என கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.