கட் செய்துவிட்டு ஓட்டமும் நடையுமாக ஓடிய தாமரையையே பார்த்துச் சிரித்தான். தேவாவிற்கு எதுவுமே புரியவில்லை
”என்ன இது ஏன் தாமரை இப்படி எல்லாம் நடந்துக்கறா” என கேட்க தாஸ் அவனிடம் சொன்ன சைகை மொழி புரியாமல் விழித்தவனைப் பார்த்த கீர்த்தனா
”சின்னப்ப உங்க தாத்தாவும் தாமரை பாட்டியும் காதலிச்சாங்களாம், அப்புறம் அந்த சுந்தரம் சூழ்ச்சி செஞ்சி காதலை பிரிச்சி தாமரை பாட்டியை கட்டாயமாக கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். கல்யாணம் ஆனதால சந்நியாசம் போன உங்க தாத்தா, தாமரைக்கு 1 குழந்தை பிறந்த பின்னாடிதான் உங்க பாட்டியை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.”
“நீ சொல்றது எனக்குப் புரியலை தாத்தாவும் தாமரையும் காதலிச்சிருந்தா அவங்கதானே கல்யாணம் பண்ணியிருக்கனும், இந்த சுந்தரம் எங்கிருந்து நடுவுல வந்தான்” என கேட்க கீர்த்தனா அவனிடம் பொறுமையாக அன்று பாட்டி சொன்ன கதையை சொல்ல ஆரம்பிக்க இருவரும் பொறுமையாக கேட்கலானார்கள்.
அரை மணி நேரம் கழித்து
”இதான் கதை, இப்ப கூட தாத்தா பேசவும் பாட்டிக்கு என்ன பேசறதுன்னு தெரியலை, பல வருஷங்கள் கழிச்சி பேசறதால உணர்ச்சி வசப்பட்டு அழுகுறாங்க” என சொல்ல தேவாவிற்கு ஒரு பக்கம் வியப்பாகவும், ஒரு பக்கம் கவலையாகவும் இருந்தது
”அவங்க காதல் கதை போலதான் நம்ம கதையும் இருக்கு. ஆனா என்ன ஒரே வித்தியாசம் விக்ரம் உன்னை தூக்கறதுக்குள்ள நீ இங்க வந்து இறங்கிட்ட”
“விக்ரம் என்னை தூக்க நீங்க விட்டிருக்க மாட்டீங்க”
“தெரியும் தெரியும் சரி கிளம்பு வா”
“இல்லை நான்”