(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“முதல்ல கீர்த்தனாவை சரி செய் தாமரை, தாத்தாகிட்ட எப்ப வேணும்னாலும் பேசிக்கலாம்” என சொல்ல தாமரை படும் பாட்டைக் கண்ட கீர்த்தனாவோ

   

”போன் பண்ணிக் கொடுங்க, பாட்டி தாத்தாகிட்ட பேசறது முக்கியம்” என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு வியந்த தாஸ் உடனே தன் செல்போனில் இருந்து தாத்தாவிற்கு போன் செய்தான்.

   

”ஹலோ” என மறுபக்கம் தாத்தாவின் குரல் கேட்டதும் உடனே போனை தாமரையிடம் கொடுத்து பேசு என சைகை செய்ய அந்த போனை வாங்கவே கைகள் நடுங்கியது தாமரைக்கு, இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் போன் வாங்கியவர் காதில் வைத்தார்

   

”ஹலோ தாஸ் தாஸ் என்னடா பண்ற எல்லாரும் எப்படியிருக்காங்க, தாமரை எப்படியிருக்கா” என அவர் அக்கறையாக கேட்க எப்போதும் தாஸ் அவர் கேட்கும் கேள்விக்கு ம் கொட்டுவான் அதை வைத்தே அவர் புரிந்துக் கொள்வார். இப்போது மறுபக்கம் பதில் வராமல் போகவே சில நொடிகள் காத்திருந்தவர் பின்பு

   

”தாமரை” என மெதுவாக அழைக்க பல வருடங்கள் கழித்து வைத்தியநாதன் தன்னிடம் பேசியதைக் கண்டு மனம் குளிர்ந்த தாமரையோ கண்கள் கலங்க 

   

”இருக்கேன்” என்றார். 

   

அவ்ளோதான் தாத்தாவிற்கு என்ன பேசுவதென தெரியவில்லை. அவ்வளவு நேரமும் தாமரையிடம் பேச ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை மனப்பாடம் செய்தவருக்கு இப்போது அழுகையைத் தவிர ஒரு வார்த்தையும் வெளியே வரவில்லை. தாமரையும் அப்படித்தான் போனில் தாத்தாவின் விசும்பல் சத்தம் கேட்டு தன்னையறியாமல் கண்கலங்கி வாய் பொத்தி அழ ஆரம்பித்தவரின் தோளை பிடித்த கீர்த்தனா

   

”பேசுங்க பாட்டி” என மெதுவாக சொல்ல அவரோ முடியாது என போனை தாஸ் இடம் தந்துவிட்டு அவசரமாக கார் இருக்கும் இடத்திற்குச் செல்ல போனை வாங்கிய தாஸ் அதை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.