(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“இதப்பாரு, தாமரை கவலையா இருக்காப் பாரு போ போய் சமாதானம் பண்ணு போ” என விரட்ட அவளும் அதை நம்பி அங்கு சென்றாள். காருக்குள் பின் சீட்டில் அழுதுக் கொண்டிருந்த தாமரையின் பக்கத்தில் அமர்ந்த கீர்த்தனாவோ அவருக்கு சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருந்தாள். காரில் ஏறிய தேவாவோ தாஸிடம் மறைமுகமாக சைகை செய்து விட்டு காரை நேராக மதுரைக்கு திருப்பினான்.

   

1 மணி நேரம் கழித்து கீர்த்தனா அலறினாள்

   

”எங்கப் போறீங்க”

   

“மதுரைக்கு”

   

“ஆனா நான் வரலை”

   

“சும்மா இரு இப்படியெல்லாம் செய்யாத சரியா அமைதியா இரு” என சொல்லிவிட்டு தாமரையைப் பார்த்தான்

   

”என்ன தாமரை லவ்வெல்லாம் செஞ்சிருக்க சொல்லவேயில்லை” என கிண்டல் செய்ய அவரோ வெட்கப்பட்டு

   

”போடா உனக்கேன் நான் சொல்லனும்” என்றார் முகம் தெளிவாக

   

”கீர்த்தனாவுக்கு மட்டும் சொன்ன எனக்கு சொன்னா என்னவாம்”

   

“நீ வைத்திகிட்ட கேட்டுக்க”

   

“ஓ வைத்தி, செல்ல பேர் வைச்சிருக்கியா இரு இரு தாத்தாகிட்டயே சொல்றேன்”

   

“சொல்லிக்க எனக்கென்ன பயமா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.