“தாமரை எழுந்துட்டாளா”
“தாத்தா நானே இங்க பெரிய பிரச்சனையில இருக்கேன், உனக்கு தாமரைதான் முக்கியமா, சும்மா அவள் எழுந்தாளா, சாப்பிட்டாளான்னு ஆயிரம் போன் பண்ணு அவள்ட்ட பேச இப்ப நேரம் இல்லை போனை வை” என கத்திவிட்டு போனை வைக்கவும் தாமரையின் முகம் மாறியது
”என்னாச்சி தேவா”
“அது ஒண்ணுமில்லை தாமரை, தாத்தா சும்மாவே போன் பண்ணி உன்கிட்ட பேசனும்னு என்னை தொல்லை பண்றாரு”
“ஏன் என்ன விசயம் ஊர்ல எல்லாமே நல்லாதானே போகுது”
“நீ போனதால உன் புருஷனுக்கு ஹைபிபியாம், வீட்ல ரெஸ்ட் எடுக்கறாராம், என் மேல போலீஸ் கேஸ் இருக்காம்”
“சரி இவ்ளோதானே”
“அதுக்கில்லை உன்கிட்ட பேசனும்னு தொல்லை பண்றாரு” என சொல்ல அவர் உடனே எழுந்து நின்றார்
”என்கிட்ட பேசனும்னு அவரே சொன்னாரா” என ஆசையாக கேட்க அவனோ வித்தியாசமாக பார்த்துவிட்டு ஆமாம் என தலையாட்ட
”போன் பண்ணிக் கொடு நான் பேசறேன்” என ஆர்வமாக கேட்க அவனோ
”எதுக்கு என்ன பேசுவ நீ, உன் புருஷனைப் பத்திதானே”
“அவரை பத்தியில்லை நீ போன் செய்து கொடு”