Page 21 of 32
“தாமரை பத்திரமா இருக்காளா?”
“பத்திரமாதான் இருக்கா அப்புறம் ஒரு விசயம்”
“என்னடா”
“நாளைக்கு எனக்கும் கீர்த்தனாவுக்கும் இங்க கோயில்ல கல்யாணம் வந்துடு”
”ஓ சரி சரி நல்லது நல்லது”
“நீ மட்டும் வா, வேற யாரையும் கூட்டிட்டு வராத”
“ஏன்டா”
“வேணாம் என்னை அவங்க விரட்டினாங்கள்ல அப்புறம் என்ன விடேன்”
“சரிடா சரி இப்ப என்ன நான் மட்டும் வரேன் போதுமா தாமரை எப்படியிருக்கா?”
“அவள் நல்லாயிருக்கா”
“சரி சரி கல்யாணம் ஆன பின்னாடி நேரா வீட்டுக்குதானே வருவே”
“ஆளைப்பாரு அந்த வீட்டுக்கு நான் ஏன் வரனும், நான் தனியா வீடு பார்த்துட்டேன், தனிக்குடித்தனம் போறேன்”
”இதுக்கு நீ சொந்தமா வீடே கட்டிடலாமே”
“கட்டனும்தான் அதுக்குள்ள தங்கறதுக்கு எங்க போறது அதான் பார்க்கறேன்”
“சரி சரி வீடு எங்க”