”இங்க என்ன செய்றீங்க” என கேட்க
அதற்கு சரண்யா
”எனக்கு தேவா வேணும்” என அவள் கேட்க போலீசோ
”உங்க பையன் இவங்களை ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணு கழுத்தில தாலி கட்டறதா புகார் வந்திருக்கு முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க” என கத்த அனைவரும் அச்சத்தில் உறைந்தார்கள்.
இது அநியாயம் என் பையன் இவளை விரும்பலை ஏமாத்தலை” என கைலாசம் சொல்ல சரண்யா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவளுடைய தாத்தாவிடம் வந்தார் வைத்தி
”என்ன இது உங்க பேத்தி சொல்றது பொய்” என சொல்ல அவரோ
“பொய்தான் தெரியுது, என்ன செய்றது இருக்கறது இவள் ஒருத்திதான் அவளும் தற்கொலை பண்ணிக்கறதா சொல்றாளே” என பயப்பட அவரோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
”அவள் பொய் சொல்றா, தற்கொலை எல்லாம் அவள் செஞ்சிக்க மாட்டா”
“இல்லை செஞ்சிக்கிட்டா 2 நாள் முன்னாடி அவள் தற்கொலை பண்ண முயற்சி செஞ்சப்ப கடைசி நேரத்தில நான் அவளை காப்பாத்தினேன். அவளுக்கு தேவா வேணும் கொடுத்துடுங்க” என சொல்ல தேவாவோ
”முடியாது என்ன விளையாடறீங்களா எனக்கு கீர்த்தனாதான் முக்கியம் சரண்யா தேவையில்லை” என சொல்லிக் கொண்டே மணமேடையை விட்டு கீழே இறங்கி அவர் முன் வந்து நிற்க அவரோ அவனது காலில் விழப் போக அதைத் தடுத்து நிப்பாட்டினான் தேவா