“என்ன செய்றீங்க நீங்க”
”என் பேத்தி வாழனும்”
“அதுக்கு நான் அவளை கல்யாணம் பண்ணிக்கனுமா, உங்க பேத்தியை விட சின்னவள் கீர்த்தனா அவள் வாழ்க்கையை பத்தி நீங்க யோசிச்சீங்களா” என கேட்க அதற்கு சரண்யாவோ
”அவளையும் கல்யாணம் பண்ணிக்க என்னையும் கல்யாணம் பண்ணிக்க” என சொல்ல அதிர்ந்தான் தேவா
அந்நேரம் ஐயரோ
”முகூர்த்த நேரம் முடியப்பொகுது சீக்கிரமா வாங்கோ இதை விட்டா அடுத்த நல்ல முகூர்த்தம் வர இன்னும் 15 நாள் காத்திருக்கனும்” என சொல்ல மேடையில் இருந்த கீர்த்தனாவோ பயத்தில் அழ ஆரம்பிக்க அவளிடம் சென்றார் தாமரை
”நீ ஏன் அழற அமைதியா இரு நான் இருக்கேன்ல” என சொல்லிவிட்டு நேராக சரண்யாவிடம் வந்தார்
”உனக்கு அறிவிருக்கா இப்படியா கேட்ப, அவள் பாவம் இல்லையா”
“நான் அவளை தடுக்கலையே அவளும் இருக்கட்டும் நானும் இருக்கேன்” என சொல்ல
”எதுக்கு அவளை அப்ப விரட்டின மாதிரி இப்ப விரட்டறதுக்கா முடியாது”
”இல்லை இல்லை நான் அப்ப பவி பேச்சைக் கேட்டு அப்படி நடந்துக்கிட்டேன், எனக்குத் தெரியாது பவியும் தேவாவை விரும்பினாள்ன்னு தப்பு என்னோடதுதான் அதை சரிசெய்யதான் நான் இப்ப வந்தேன்” என அவள் பேச