(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”உன்னோட காதலுக்காகவா இவ்ளோவும் செய்ற அந்த காதல் கிடைக்கலைன்னா என்ன செய்வ நீ யோசிச்சியா”

   

“யோசிச்சிட்டேன். காத்திருப்பேன் என் காதலை தேவா புரிஞ்சிக்கறவரைக்கும் காத்திருப்பேன்” என சொல்ல அதைக்கேட்ட தேவாவோ தலையில் அடித்துக் கொண்டான். தாஸை பார்க்க அவனோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்க தேவா அவனிடம்

   

”என்னடா நீ எதை யோசிக்கற, இப்பவே சொல்லிடு என்னால உன் சைகையை புரிஞ்சிக்கற அளவுக்கு தெம்பு இல்லை ரொம்ப நொந்து போயிருக்கேன்” என சொல்ல அவனோ அவசரமாக தன் செல்போனில் ஏதோ டைப் செய்து அதை அவனிடம் காட்ட அதை வாங்கிப் படித்தான்

   

“இன்னிக்கு சாந்தி முகூர்த்தம் இருக்கே ரெண்டு பொண்ணுக்கும் சேர்த்து ரூமை அலங்காரம் செஞ்சிடவா இல்லை இன்னிக்கு ஒருத்தி நாளைக்கு ஒருத்தின்னு அலங்காரம் செய்யவா யார் முதல்லன்னு முடிவு பண்ணிட்டியா” என இருக்கவே கோபத்தில் என்றுமே அடிக்காத தேவா இன்று தாஸை குனிய வைத்து அவனது முதுகில் 4 அடி வைத்தான்

   

”அவனவன் இங்க பாதாளத்தில விழுந்து கிடக்கறான் உனக்கு அலங்காரம் கேட்குதா அமைதியா இருடா” என கத்தவும் தாமரை வந்தார்

   

”என்னடா ஆச்சி ஏன் அவனை அடிக்கற”

   

“நீ வேற தாமரை இங்கயே நெருப்பு பத்திக்கிட்டு எரியுது, இதுல இவன் வேற டின்டின்னா நெய்யா ஊத்தறான்”

   

“அப்படி என்னாச்சி”

   

“இன்னிக்கு சாந்தி முகூர்த்தம் யார்கூட இருப்பேன்னு நான் சொன்னா, துரை ரூமை அலங்காரம் செய்வாராம்” என சொல்ல தாமரையோ

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.