(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“எது இதுவா இதுக்கு பேரு ப்ரபோஸ், நீ அதையெல்லாம் தாண்டிட்ட, முதல்ல பார்க்கனும், அப்புறம் ப்ரபோஸ் பண்ணனும், அப்புறம் லவ், அதுக்கப்புறம் தான், மேரேஜ் நீ என்ன கடைசியில இருந்து முதலுக்கு வர்ற”

   

“இல்லை  முறைப்படி நான் வரலைன்னாலும் உங்களை முறையா கல்யாணம் பண்ணிக்கிட்டேனே”

   

“அடுத்தவள் வாழ்க்கையில பங்கு போட்டுக்கிட்டு பேச்சைப் பாரு ஒழுங்கா காதல் பண்ணு வா” என அவளது கையை பிடித்து இழுக்க அவளோ தடுமாறி ஒதுங்கி நின்றாள்.

   

”என்ன நீங்க பண்ணு பண்ணுன்னா எப்படி பண்றது எனக்குத் தெரியாது”

   

“காதல் செய்யவே தெரியல அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட”

   

“உங்களை எனக்கு பிடிச்சிருக்கு உங்க கூட வாழனும்னு ஆசைப்படறேன்”

   

“என் குடும்பத்தோட வாழனும்னு ஆசைப்பட்டிருப்ப அதானே”

   

“உங்க குடும்பமும் எனக்குப் பிடிக்கும் ஆனா உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்”

   

“எந்த விசயத்தில பிடிக்கும் இளிச்சவாயனா இருக்கான் என்ன சொன்னாலும் கேட்பான், இவனை அடிமையாக்கி ஆட்டி படைக்கலாம்னா” என கேட்க அவளோ

   

”அய்யோ இல்லை நான் வேணா உங்களுக்கு அடிமையாவேனே தவிர உங்களை நான் என்னிக்குமே என்னோட அடிமையா நினைச்சதில்லை” என சொல்ல அவனுக்கு தலையே வலித்தது.

   

”நல்லா அழகா பேசற ஆனா எதுவுமே என் மனசுல ஒட்டலை சரி வா சாப்பிட வா” என அழைக்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.