(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”கடைசிவரைக்கும் நீதான் எனக்கு துணையே, இருந்துட்டு போ” என நொந்துபடி சொல்லிவிட்டு  அப்படியே சோபாவில் படுத்து கண்ணயர்ந்தான் தேவா.

   

கீர்த்தனாவோ யாரும் இல்லாமல் போகவே உடைகளை மாற்றி சாதாரண புடவைக்கு மாறி மதியம் சமைக்க கிச்சனுக்குச் சென்றாள். அவளுக்கு துணைக்கு தாஸ் சென்றான். தாஸ் காய்கறிகளை நறுக்க கீர்த்தனா சமைக்கலானாள்.

   

சரண்யாவும் கிச்சனுக்கு வர அவளை முறைத்தாள் கீர்த்தனா

   

”நான் ஏதாவது உதவி செய்யலாமா” என கேட்க தாஸோ அந்நேரம் கண்கள் கலங்க வெங்காயத்தை வெட்ட முடியாமல் தவித்தவன் சரண்யா கேட்கவும் உடனே அவளிடம் காய்கறி நறுக்கும் படி சொல்லிவிட்டு முதலில் அங்கிருந்து வெளியேறி தேவாவிடம் வந்து அவன் தூங்குவதைக் கண்டு அங்கிருந்த ஹாலில் பாய் விரித்து படுத்து உறங்கிவிட்டான்.

   

மதியம் சாப்பாடு சமைத்து முடிந்த உடன் கீர்த்தனா ஆசையாக தேவாவிடம் வந்தாள். அவனையே ஏக்கமாக பார்த்தவள் அங்கு தாஸ் இருப்பதைக் கண்டு சற்று அச்சத்துடனே தேவாவின் உடலை தொட்டு உலுக்கி எழுப்பினாள்

   

”என்னங்க எழுங்க” என எழுப்ப அவனோ புரண்டான். மெல்ல கண்கள் விழித்தவன் கீர்த்தனாவைக் கண்டதும் சிரித்தவன் அவளது கையை பிடித்து இழுக்க

   

”அண்ணா இருக்காரு சாப்பிட வாங்க” என சொல்ல அவனும் எழுந்துப் பார்த்தான்.

   

”இவன் ஒருத்தன் உனக்கு காவலுக்கு இருடான்னா எனக்கு காவலுக்கு படுத்திருக்கான் பாரு, இவனை டேய் எழுடா எழு” என அவனது தோளை உலுக்கி எழுப்பிவிட அவனும் எழுந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு தேவாவிடம் என்ன என கேட்க

   

”சாப்பிட வாடா” என சொல்ல அவனும் மெல்ல எழுந்தான். 

   

”நீ எல்லாம் எடுத்து வை நான் முகம் கழுவிட்டு வரேன்” என சொல்லி பெட்ரூம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.