”இவன் ஏன் நம்மளை பார்க்கறான்” என நினைத்தவள் அவனிடம்
”எதுக்கு அப்படி பார்க்கற” என கேட்க அவனோ அவளிடம் ஏதோ சைகை செய்ய
”புரியலை” என்றாள் சரண்யா அதற்குள் அங்கு வந்த தேவாவோ
”எவ்ளோ நாள் இங்க இருப்பேன்னு கேட்கறான் தாஸ்” என சொல்லிக் கொண்டு வந்து அமர அவனுக்கு கீர்த்தனா பரிமாறிவிட்டாள். கீர்த்தனா செய்வதைக் கண்ட சரண்யாவோ
”ஓ சாரி இது எனக்கும் தெரியாது நான் வேணா பரிமாறட்டுமா”
“வீம்புக்கு கல்யாணம் பண்ணா போதாது, புருஷனையும் பார்த்துக்கனும் எங்க அதெல்லாம் உனக்கு தெரியப்போகுது உன் வீட்ல எதையுமே சொல்லி வளர்க்கலையா”
“அப்படிப்பார்த்தா கீர்த்தனாவுக்கும் யாரும் இல்லை ஹாஸ்டல்ல வளர்ந்தவளுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்”
“அவள் ஹாஸ்டல்ல வளர்ந்தாலும் வீட்டுக்குள்ள எப்படி இருக்கனும்னு தெரியும், உன்னைப் போல இல்ல” என சொல்ல அவள் தலை திருப்ப தாஸோ அவளிடம் சைகை செய்ய
”என்ன சொல்றாரு எனக்கு புரியலை” என கேட்க தேவாவோ
”நீ எத்தனை நாள் இங்க இருப்பேன்னு கேட்கறான்”
“எத்தனை நாள்னா என்ன அர்த்தம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. இனி சாகறவரைக்கும் உங்க கூடதான் நான் இருக்கனும்” என சொல்ல அதைக்கேட்டு வியந்த கீர்த்தனாவோ அமைதியாக தேவாவை பார்க்க அவன் இளக்காரமாக சிரித்துவிட்டு சாப்பிடலானான். தாஸோ பயங்கரமாக யோசித்துவிட்டு சரண்யாவிடம்