(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”எப்ப சாவ“ என்பது போல் கேட்க அது மட்டும் புரிந்து முறைத்தாள்

   

”நான் இருக்கறது யாருக்குமே பிடிக்கலையா விட்டா நீங்களே என்னை கொன்னுடுவீங்க போல, நான் வந்தது பணத்துக்காக இல்ல அன்புக்காக அவ்ளோதான் அதை ஏன் யாருமே புரிஞ்சிக்கலை” என சொல்லி கண்கள் கலங்க சாப்பிடாமலே எழுந்து தன் அறைக்குச் செல்லவும் கீர்த்தனாவுக்கு பாவமாகிப் போனது, அவள் தேவாவை பார்க்க அவனோ அமைதியாக ஆனந்தமாக சாப்பிட தாஸை பார்த்தாள். அவனோ இன்னும் பரமானந்தமாக சாப்பிட நொந்து போனாள் கீர்த்தனா

   

”பாவம் சரண்யா அழுதுக்கிட்டு போறா, நீங்க என்னடான்னா அமைதியா இருக்கீங்களே”

   

“என்ன செய்யலாம்ங்கற” என தேவா கேட்க அதற்கு கீர்த்தி

   

“போய் சமாதானம் செய்யலாமே”

   

“அதை நீயே போய் செய் போ”

   

“யாரு நானா நான் முடியாது”

   

“ஏன் முடியாது”

   

“திரும்ப என் பிறப்பை பத்தி அவள் ஏளனமா பேசிட்டா”

   

“அதுசரி அப்ப நானும் போக மாட்டேன். ஏதாவது ஆறுதல் பேசறேன்னு போய் அவள்ட்ட நான் வசமா மாட்டிக்க மாட்டேன்”

   

”அண்ணா நீயாவது போய் அவங்களை சமாதானம் செய்யலாம்ல” என தாஸை பார்த்து கீர்த்தனா கேட்க அவனோ அவளை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு முடியாது என வேகமாக தலையாட்டிவிட்டு சாப்பிடலானான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.