வாழனும்”
“உனக்கு மொய் தரலாம்னு வந்தா ரொம்பதான் பிகு பண்ற”
“மொய் தர்றதா இருந்தா இந்த ட்ரான்போர்ட் என் பேர்ல மாத்தின பேப்பரை தந்திருக்கனும், ரொம்ப கெட்டிக்காரர்தான் நீங்க உங்க பேருக்கு வந்துட்ட பின்னாடி ட்ரான்ஸ்போர்ட் பத்திரத்தை எனக்கு கொடுத்தா அது எப்படி எனக்குச் சொந்தமாகும்” என சொல்ல அவர் சிரித்தார்
”குடும்பஸ்தன் ஆயிட்டு வர்ற சரி சரி உன்னை பார்க்க யார் வந்திருக்கான்னு பாரு” என சொல்ல அவனும் வெளியே பார்த்தான். அங்கு சுப்ரஜா இருக்கவே
”ஏய் குட்டிம்மா வா உள்ள வா” என அழைக்க அவள் ஓடிவந்தாள்.
அவளை தூக்கிக் கொண்டான் தேவா
”மாமா ஏன் இங்க இருக்க மாமா, வீட்டுக்கு வரமாட்டியா மாமா”
“வரேன் வராம எங்கப் போறேன் ஆமா இன்னிக்கு நீ ஸ்கூல் போலயா”
“லீவு”
“எதனால லீவு”
“உனக்கு கல்யாணம்னு லீவு”
“கல்யாணம்னா என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு”
“ஓ தெரியுமே மாமா பாட்டி சொன்னாங்க”
“என்ன சொன்னாங்க”