“கல்யாணம் ஆனா புதுசா அத்தை வருவாங்களாமே”
“ஆமாமாம் இதப்பாரு உன் அத்தையை” என சொல்ல அவளும் பார்த்தாள் 2 பெண்கள் சிரித்தபடியே கை நீட்ட அவள் திகைத்தாள்
”என்ன மாமா அவங்க இங்க இருக்காங்க அவங்க அத்தையா? மாமாவா? மாமா” என சரண்யாவை பார்த்து கைகாட்டி கேட்க சரண்யாவுக்கு அது கஷ்டமாகிப் போனது.
அந்நேரம் அவள் சாப்பிட்டு முடித்திருந்தால் தட்டை எடுத்துக் கொண்டு அமைதியாக உள்ளே சென்றுவிட கீர்த்தனாவும் சரண்யாவை தேடிச் செல்ல சுப்ரஜா அவசரமாக இறங்கி கீர்த்தனாவை பிடித்துக் கொண்டாள்.
“சரி இனிமே என்ன செய்யலாம்ங்கற” என கைலாசம் தேவாவை பார்த்துக் கேட்க அவனோ யோசித்தான்
”தெரியலைப்பா கையில தொழில் இருக்கு பார்க்கலாம்”
“நான் சொல்றதைக் கேளு இந்தா இதை வாங்கிக்க”
“வேணாம்பா இது இப்ப உங்களோடது. எனக்கு வேணாம்”
“வாங்கிக்கடா பணம் வர்றப்ப அன்னிக்கு நான் ஏலத்தில வாங்கின தொகையை கொடுத்துடு, நான் உன் பேர்ல பத்திரம் பண்ணிடறேன்”
“ஓ அப்படி வர்றீங்களா அப்படின்னா அக்ரிமெண்ட் போட்டுடறேன், அதுவரைக்கும் இந்த பத்திரம் உங்ககிட்டயே இருக்கட்டும், இப்ப நீங்க கிளம்புங்க நாளைக்கு காலையில நான் அக்ரிமெண்ட் கொண்டு வரேன்” என சொல்ல
”சரி உன் இஷ்டம்” என பத்திரத்தை பத்திரப்படுத்தியவர் உள்புறமாக