“ஆமாம் கால் வலிக்குது என்ன செய்றதுன்னு தெரியலை”
“நான் வேணா கால் அமுக்கி விடவா”
“சொல்லாத செய்” என சொல்ல அவள் அமைதியாக தரையில் அமர்ந்து அவனது ஒரு பக்க காலை பிடித்துவிட அதைப்பார்த்த சரண்யாவும் தரையில் அமர்ந்து இன்னொரு பக்க காலை பிடிக்க கத்தினான் தேவா
”என்ன செய்ற நீ விலகி போ”
“என்னையும் பிடிச்சி விட சொன்னீங்களே”
“சொன்னேன் ஆனா நீதான் அறுவருப்பா நினைச்சி ஒதுங்கிப் போனியே இப்ப ஏன் வர்ற”
“இல்லை எனக்கு இதெல்லாம் புதுசு அதான்”
“அப்ப அவளுக்கு மட்டும் என்ன புதுசு இல்லையா செய்யலை”
“அதான் எனக்குப் புரியலை”
“ஆமாம் நீ சென்னைப் பொண்ணுதானே சொந்த பந்தம் இருக்காங்கள்ல உனக்கு”
“இருக்காங்க”
“அப்புறம் ஏன் எதுவும் தெரியலை, புரியலைன்னு சொல்ற”
“இல்லை நான் சின்னப்ப ஊட்டி கான்வென்ட்ல படிச்சேன். அப்புறம் தாத்தா என்னை பாரின்ல படிக்க வைச்சாரு, படிச்சி முடிச்சதும் நான் சென்னைக்கு வந்து 6 மாசம்தான் ஆகுது, உடனே இந்த ஊருக்கு வந்தேன் அதனால பெரிசா எனக்கு எதுவும் தெரியாது”