(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”என்ன வரனும்” என இருவருமாக கோரசாக கேட்க

   

”என்னங்கடி கோரஸா பாடறீங்க போதும் அழுதது வாங்க போய் தூங்கலாம்” என இருவரையும் இழுத்துக் கொண்டு அந்த பெட்ரூமிற்கு சென்றவன் படுத்துக் கொண்டான். இரு பக்கமும் இரு பெண்களும் படுத்துக் கொள்ள தேவா கீர்த்தனாவை அணைத்தவாறு படுக்க அதைப்பார்த்த சரண்யாவோ அவனை அணைத்தவாறு படுக்க தேவா கத்தினான்

   

”சரண்யா வேணாம் கையை எடு விலகி படு”

   

“ம்ஹூம் முடியாது நான் காதல் பண்றேன்”

   

“என்ன உளர்ற”

   

“நான் பார்த்துட்டேன் நீங்களும் கீர்த்தனாவும் எப்படி காதல் பண்றீங்கன்னு, அதே போல நானும் காதல் செய்யப் போறேன்”

   

“எப்படி இப்படி கட்டிப்பிடிச்சி தூங்கியா”

   

“ஆமாம்”

   

“எப்படியோ போ ஆனா என்னை தூங்க விடு, ஏதாவது சேட்டை பண்ண தரையில தள்ளிவிட்டுடுவேன்” என சொல்ல அவள் சிரிக்கவும் தலையில் அடித்துக் கொண்டு கீர்த்தனாவை பார்க்க அவள் படுத்த உடன் உறங்கலானாள். ஆசையாக அவள் கன்னத்தில் முத்தம் வைத்து இவன் தூங்க அவனது கன்னத்தில் முத்தம் வைத்து சரண்யா தூங்க தேவா உடனே கண் விழித்து சரண்யாவை பார்த்து நொந்துக் கொண்டே 

   

”இவள் என்ன நான் செய்றதை எனக்கு செய்றா, இன்னும் என்னென்ன நடக்குமோ தெரியலையே ரெண்டு பொண்ணுங்களும் போட்டி போட்டு என்னை தாளிக்காம இருந்தா சரி” என நினைத்துக் கொண்டே உறங்கலானான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.