“நானும் வரேன்”
“எங்க”
“தூங்க”
“நீ இத்தனை நாளா தனியாவே வாழ்ந்த, தனியாவே தூங்க மாட்டியா சொல்லு, போய் உன் ரூம்ல தூங்கு”
“ஏன் என்னை ஒதுக்கறீங்க இப்படி செய்யாதீங்க எனக்கு கஷ்டமாயிருக்கு” என அவள் அழ ஆரம்பிக்க
“ஏய் என்ன இது நடிப்பா? முன்னெல்லாம் அழாம இருப்ப இப்ப என்ன தொட்டதுக்கெல்லாம் அழற, இப்படி நீ அழுது அழுதே காரியத்தை சாதிக்கலாம்னு நினைக்கிறியா அது முடியாது நடிக்காம இரு”
“நான் நடிக்கலை நிஜமாவே நான் அழறேன்”
“சரி எதுக்கு அழற”
“நீங்கதான் எனக்கு எல்லாம்னு வந்தேன் ஆனா நீங்களே என்னை வெறுக்கறப்ப எனக்கு கஷ்டமாயிருக்கு” என அவள் சொல்லவும் தேவா கீர்த்தனாவைப் பார்த்தான். இப்போது அவள் அழவே
”நீ ஏன் அழற?”
“அவங்க சொல்றதை கேட்டு எனக்கும் தானா அழுகை வருது”
”ஆஹா என்ன ஒரு ஒற்றுமை இந்த சமயத்தில எது வரனுமோ அது வராதே உங்களுக்கு” என கேட்க