(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

கணவர்தான், அவரை என்கிட்டயிருந்து யாரும் பறிச்சிக்காம பார்த்துக்குங்க அதுவே போதும் எனக்கு” 

   

சரண்யாவோ

   

”அப்பா அம்மா பாசத்துக்காக ஏங்கி கடைசியில எனக்கு தேவா கிடைச்சிருக்காரு. அவர்கிட்டயிருந்து நான் எதிர்பார்க்கற அன்பும் காதலும் கிடைக்கனும் அதுவே போதும் எனக்கு, என்னால கீர்த்தனா வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராது, அப்படி வர்ற மாதிரியிருந்தா நானே ஒதுங்கி இந்த ஊரை விட்டே போயிடுவேன்” என வேண்டிக்கொள்ள தேவாவோ இரு பெண்களின் பக்தியைக் கண்டு மெச்சி

   

”கடவுளே இவளுங்க ரெண்டு பேரும் என்ன வேண்டிக்கிட்டாலும் சரி அது அப்படியே நடக்கனும் அதான் என் வேண்டுதல்” என வேண்டிக் கொண்டு மூவரும் வண்டி ஏறி தாமரை வீட்டிற்கு வந்தார்கள். அங்கு வாசலில் அமர்ந்திருந்த சுந்தரத்தைக் கண்டும் காணாதது போல ஏதோ தன் வீட்டுக்குள் நுழைவது போல நுழைந்தான் தேவா அந்த 2 பெண்களும் பின் தங்கி நிற்கவே 

   

”வரலையா வாங்க” என அழைக்க அவர்களும் சுந்தரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டுக்குள்  செல்ல சுந்தரமோ கோபத்துடன் உள்ளே வந்து தேவாவை பிடித்தார்

   

”என்னடா நீ ஏதோ உன் சொந்த வீடு போல உள்ள போற”

   

“ரொம்ப கத்தினீங்க 2வது முறையா தாமரையை  தூக்கிடுவேன், இந்த முறை தாமரைக்கும் உங்களுக்கும் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு என் தாத்தாவை தாமரைக்கு கட்டிவைச்சிடுவேன்” என மிரட்ட அதில் அவர் பயத்தில் உறைந்துநின்றுவிட

   

”அந்த பயம் இருக்கட்டும்” என சொல்லிவிட்டு 

   

”தாமரை தாமரை” என ஆசையாக அழைக்க அவரும் வந்தார். சோகமாக இருந்தவர் தேவாவைக் கண்டதும் சிரிப்புடன் வந்தார்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.