”இந்த அவசரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, போ கீர்த்தனாவோட போய் சமையல் கத்துக்க” என சொல்ல அவளும் சரியென கீர்த்தனாவை பார்க்க அவளோ சரண்யாவை பேயை பார்ப்பது போல பார்த்து வைக்க அவளிடம்
”சாரி கீர்த்தனா எனக்குப் புரியுது நீ ஏன் இப்படி நடந்துக்கறேன்னு தப்புதான் அன்னிக்கு உன்னை நான் அப்படி பேசியிருக்க கூடாது சாரி சாரி சாரி” என அவளது காலில் விழப்போனவளை தடுத்தாள் கீர்த்தனா உடனே தேவா
”கீர்த்தனா நம்பிடாத அவள் நடிக்கறா, அவள் தாத்தாவும் இப்படி கால்ல விழுந்துதான் என்னை பிடிச்சாரு, தாத்தாவை போல பேத்தி என்னம்மா நடிக்கறா பாரு” என சொல்ல சரண்யாவோ கண்கள் கலங்க
”நான் உண்மையாதான் மன்னிப்புக் கேட்கறேன் நான் நடிக்கலை”
“கிழிச்ச” என அவன் சொல்ல தாமரையோ
”அமைதியா இரு தேவா, அவள் கண்ல உண்மை தெரியுது, அவள் நடிக்கலை, அவளை ஏன் அழ வைக்கற”
“ஆசைதான்” என சொல்ல அவனது தோளில் செல்லமாக அடித்துவிட்டு இருபெண்களையும் பார்த்தார் தாமரை
”இதப்பாருங்க ரெண்டு பேருக்கும் சொல்லிடறேன், தெரிஞ்சோ தெரியாமலோ தேவாவோட உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. இனிமே இந்த வாழ்க்கையை நீங்க ஏத்துக்கிட்டுதான் ஆகனும். உங்களுக்குள்ள போட்டி, பொறாமை பட்டா தேவாவுக்குதான் கஷ்டம், அவன் வாழ்க்கையை நரகமாக்கிடாதீங்க, பங்கு போட்டு பகிராம விட்டுக் கொடுத்து வாழ பழகிக்குங்க, அப்பதான் குடும்பம் நல்லபடியா இருக்கும், நீங்க ரெண்டு பேரும் தேவாவை கஷ்டப்படுத்த நினைச்சீங்க, என் பேத்தி மித்ரா இருக்கா அவளை தேவாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி நான் என் வீட்டுக்கு தேவாவை கூட்டிட்டு போயிடுவேன் புரியுதா” என