(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”எனக்குத் தெரியும் தேவா நீ கண்டிப்பா வருவேன்னு வா வா போலாம் வா” என அவனது கையை பிடித்து வெளியே செல்ல முயல சுந்தரம் தடுத்தார்

   

”வேணாம் தாமரை, இப்படி செய்யாத இங்கயே இரு” என சொல்ல தாமரை முறைக்கவும் தேவா சிரித்தான்

   

”ஏன் தாமரை என்னாச்சி உனக்கு, இங்க இருக்க பிடிக்கலையா”

   

“பிடிக்கலை எப்ப இந்தாளு என் மேல சந்தேகப்புத்தியோட பார்த்து ஒரு வார்த்தை பேசிட்டாரோ அப்பவே இந்த வீட்ல தங்கவே எனக்கு பிடிக்கலை. பிறந்த வீடு இருந்தாலாவது நான் போயிருப்பேன், எனக்குன்னு யாரும் இல்லைன்னுதான் இத்தனை நாளும் என்னை இவர் தொல்லை பண்ணாரு. இப்பதான் நீ இருக்கியே நீ என்னை பார்த்துக்க மாட்டியா”

   

“அட நீ வேற என்னை பார்த்துக்கவே யாரும் இல்லைன்னு உன்னை தேடி வந்தா, நீ இப்படி பேசற நியாயமா பார்த்தா நீதான் என்னை பார்த்துக்கனும்” என சொல்ல சுந்தரமும் தாமரையும் வியந்தார்கள். சரண்யாவும் கீர்த்தனாவும் அதிர்ந்தார்கள்

   

”என்னப்பா சொல்ற நான் உன்னை பார்த்துக்கனுமா என்னாச்சி, உன்னை பார்த்துக்கதான் 2 பொண்ணுங்க இருங்காங்களே” என தாமரை கேட்க

   

”இருக்காங்க அவங்க பொண்ணுங்களா இருக்கறப்பவே என்னால தாங்க முடியலை, இதுல பொண்டாட்டிங்களா ஆயிட்டாங்கன்னா என் நிலைமை என்னாகும், என் வீடு என்னாகும், தினமும் ஏதாவது பிரச்சனை சண்டை வந்தா நான் என்ன செய்றது சொல்லு, உனக்கு நான் சொல்றது புரியுதா என் நிலைமையை நீயாவது புரிஞ்சிக்க தாமரை” என அவன் பேச சுந்தரம் சிரித்தார்

   

”என்ன சிரிப்பு” என கோபமாக கேட்டான் தேவா

   

”இல்லை நீ காதலிக்கறவளையும், உன்னை காதலிக்கறவளையும் கல்யாணம் பண்ணி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.