(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அவர் மிரட்ட அவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க தேவாவோ மனதிற்குள் சிரித்தான். 

   

”என்ன புரிஞ்சதா இல்லையா” என கத்த இரு பெண்களும் தலையை பலமாக ஆட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருவருமாக கைகள் கோர்த்தபடியே கிச்சனுக்கு ஒற்றுமையாக செல்லும் அந்த அற்புத காட்சியைக்கண்ட தேவா வியந்து போய் தாமரையின் கன்னத்தில் முத்தம் வைத்தான்

   

”டேய் என்னடா செய்ற சே என்ன இது” என கத்த

   

”கலக்கிட்ட தாமரை சூப்பர் ஒரு செகன்ட்ல எதிரும் புதிருமா இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் ஒண்ணாக்கிட்டியே, நானே இதுக்கு பயந்துதான் உன்னை கூட்டி வந்தேன் நீ என்னடான்னா அசால்ட்டா செஞ்சிட்ட”

   

“ரெண்டு பொண்ணுங்களுக்கும் நீதான் தேவை, அதான் உன்னை வைச்சி காயை நகர்த்தினேன். இதுக்கே சந்தோஷப்பட்டுக்காத பார்க்கலாம் இப்படியே ஒத்துமையா வாழ்க்கை நடத்தறாங்களான்னு”

   

என சொல்ல 

   

”அதுவும் சரிதான்” என தேவா சொல்லவும்

   

”ஆமா எதுக்காக என்னை தேடி நீ வந்த, நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கலை, சும்மா வந்தியா இல்லை காரணமாவா” என பாட்டி கேட்க

   

”அந்த சுந்தரம் உன்னை இழுத்துட்டு போனது கஷ்டமாயிருந்துச்சி, உடனே வந்து பார்க்கலாம்னு  இருந்தேன் அந்நேரம் வேணாம் அப்புறம் பார்க்கலாம்னு விட்டேன். அப்படியே இன்னொரு பிரச்சனை இருக்கு, அதுக்கு உன்கிட்ட தீர்வு கேட்கலாம்னு நினைச்சி வந்தேன்”

   

“என்ன பிரச்சனை?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.