குடும்பம் நடத்த பயந்துக்கிட்டு இங்க வந்திருக்கியே அதை நினைச்சேன் சிரிச்சேன்” என சொல்ல அவனோ
”ஆமாம் நானாவது பரவாயில்லை உன்னை போலவா பிடிக்காத ஒருத்தியை கட்டாயமா கல்யாணம் பண்ணி அவள் வாழ்க்கையை நாசமாக்கினியே போதாதா”
“நான் அவளுக்கு எல்லாம் கொடுத்தேன்”
“என்ன கொடுத்த”
“வீடு, பணம், சொத்து, சுகம்”
“சுகமா அப்படின்னா ஓ சந்தோஷமா, சத்தியமா சொல்லு உன்னால தாமரை சந்தோஷமா இருந்திருந்தா இந்நேரம் நான் வந்ததும் வா போலாம்னு என் கையை பிடிச்சி இழுத்திருக்க மாட்டா புரியுதா நான் என்ன சொல்றேன்னு” என கேட்க சுந்தரத்துக்கு கஷ்டமாகிப்போனது
”தேவா வேணாம்டா அவளை என்கிட்ட கொடுத்துடு”
“முடியாது இதுவரைக்கும் நீ அவளை வைச்சி என்னத்த குடும்பம் நடத்தினியோ, இனிமே நான் என்னோட என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”
“டேய்ய்ய”
”யோவ் என் பாட்டியா வீட்டுக்கு மூத்தவளா பார்த்துக்கறேன்னு சொன்னேன்.” என சொல்ல அவரோ
”அதெல்லாம் வேணாம் அவளை விடு நீ” என கத்த
”சும்மா கத்தாம இருங்க டாக்டர் தாத்தா, இப்ப நீங்க விட்டா நான் சீக்கிரமாவே என் குடும்ப பிரச்சனையை சரி பண்ணிட்டு கூட்டிட்டு வந்து விட்டுடுவேன், முரண்டு பண்ணா டைவர்ஸ்தான் எப்படி வசதி” என கேட்க அதோடு அவர் அமைதியாக ஒதுங்கி நின்றார்