“எல்லாம் என் குடும்ப பிரச்சனைதான்”
“அதான் நான் இருக்கேனே, இப்ப அவங்களை சரிபண்ண மாதிரியே சரி பண்ணிடறேன்”
“தாமரை நான் சொல்றது உனக்கு புரியலையா கல்யாணம் ஆயிடுச்சி அடுத்து என்ன”
“என்ன”
“என்னவா யோசி தாமரை” என கேட்க அவரோ யோசித்துவிட்டு
”ஓ சாந்தி முகூர்த்தமா அதுக்கென்னடா இப்ப அதான் இருக்காங்கள்ல இரண்டு பேரும்”
“அதான் பிரச்சனையே 2 பொண்ணுங்க இருக்காங்க அவங்களுக்குள்ள சண்டை வராம இருக்கனும் நான் என்ன செய்றது”
“இதப்பாரு நீ லவ் பண்ணது கீர்த்தனாவைதானே”
“ஆமாம்”
“அப்ப நீ அவள்கூடதான் முதல்ல இருக்கனும்”
“அப்ப சரண்யா”
“சரண்யாவா அப்ப அவளையும் நீ லவ் பண்ணியா”
“கல்யாணம் பண்ணிக்கிட்டேனே இப்ப கீர்த்தியோட நான் இருந்தா சரண்யாவோடவும் நான் இல்லைன்னா உடனே அவள் தன்னோட தாத்தாகிட்ட போய் நிப்பா அந்தாளு பஞ்சாயத்து வைக்கவா”