Page 35 of 37
“அதுவும் சரிதான் பெரிய பிரச்சனைதான் ஆனாலும் பிடிக்காத பொண்ணோட எப்படி நீ இருப்ப”
“வேற வழி”
“இல்லைடா அது தப்பு அப்புறம் சரண்யா என்னை போல வாழ வேண்டியதுதான், என்னதான் இருந்தாலும் சரண்யாவும் ஒருவிதத்தில பார்க்கறப்ப எனக்கு பாவமாதான் தெரியற”
“என்னைத்தவிர உனக்கு எல்லாரும் பாவப்பட்டவங்கதான் போ தாமரை”
“அப்படி சொல்லாத சுந்தரத்தை போலதான் இந்த சரண்யா இருக்கா, கட்டாயமா கல்யாணம் பண்ணாலும் அவள் மனசுல காதல் இருக்கு”
“இப்ப என்ன சொல்ல வர்ற”
“உனக்கு சரண்யாவை பிடிக்குமா”
“பிடிக்குமே”
“அவளை லவ் பண்றியா”
“இல்லை இல்லை”
“சரி கல்யாணம் ஆனதால பொண்டாட்டியா நினைக்கிறியா”
“ஆமாம்”
“அவளோட குடும்பம் நடத்த ஆசைப்படறியா இல்லை வேற வழியில்லைன்னு”