“எதுக்கு”
“பாவத்தை தொலைக்க வா உன்னை அங்கயே தண்ணியில விட்டுட்டு வந்துடறேன், லூசு கிளம்புன்னா கேள்வி கேட்காம கிளம்பனும் அதான் ஒரு பொண்டாட்டிக்கு அழகு, எடுத்த உடனே ஆயிரம் கேள்வி கேட்கற நான் என்ன உன்னை கொலையா பண்ணப் போறேன், சின்ன விசயத்துக்கு கூட நீ என்னை நம்பாம கேள்வி கேட்கற இதுல எப்படி நீ என்னை லவ் பண்ணப்போறியோ எனக்கு சந்தேகமா இருக்கு”
“இல்லை இல்ல சாரி நான் இனிமே கேள்வி கேட்க மாட்டேன், இப்பவே நான் ரெடியாகிடறேன்” என சொல்ல அவனும் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினான். கீர்த்தனாவை தேடி கிச்சனுக்குச் செல்ல அவளோ அங்கு அழுதுக் கொண்டிருக்கவே
”அழாத கீர்த்தனா நான் வேணும்னே செய்யலை“
”விடுங்க எல்லாம் முடிஞ்சி போச்சி, என்ன என் வாழ்க்கையும் தாமரை பாட்டி வாழ்க்கை போல ஆகாம இப்படி அமைஞ்சிருக்கு, எல்லாத்துக்கும் பங்கு போட்டுத்தான் இனி நான் குடும்பம் நடத்தனும் போல” என சொல்ல நல்ல வேளையாக அவனுக்கு அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழித்தவன்
”சரி ரெடியாகு வெளிய போலாம், அப்படியே தாமரையை பார்த்துட்டு வரலாம்” என சொல்ல அவளும் ரெடியாக சென்றுவிட எப்படி இரு பெண்களுடனும் சண்டை, சச்சரவு, பிரச்சனை, பிரிவு வராமல் குடும்பம் நடத்துவது என புரியாமல் திகைத்தான்.
மூவரும் ரெடியாகி காரில் ஏறி நேராக கோயிலுக்குச் சென்றார்கள்.
அங்கு கோயிலில் மூவரும் கடவுள் முன் நின்று தங்கள் கோரிக்கைகளை வேண்டிக் கொண்டிருந்தார்கள். அதில் கீர்த்தனாவோ
”எனக்குன்னு எந்த உறவும் சொந்தமும் இல்லை புதுசா வந்த ஒரு சொந்தம்னா அது என்