Page 23 of 37
“ஓ அப்படியா சரி சரி நீ போய் ரெஸ்ட் எடு போ”
”பரவாயில்ல நானும் செய்றேனே” என அவனது காலை பிடிக்க அவன் எழுந்தே விட்டான்
”போதும் நிறுத்து இப்படி நீ செய்றது எனக்குப் பிடிக்கலை”
“கீர்த்தனா செய்றாளே”
“அவள் வேற நீ வேற புரியுதா” என சொல்லி கோபமாக முறைக்க கீர்த்தனாவோ
”கோபம் வேணாமே” என்றாள்
”சரி வா போய் தூங்கலாம்” என அவளது கையை பிடிக்க அவளோ வெட்கப்பட்டு ஒதுங்கினாள்
”என்ன இது பகல்லயா தப்பு” என்றாள்
அதைக்கேட்டு சிரித்தான் தேவா
”ஓய் நான் தூங்கத்தான் கூப்பிட்டேன் வேற எதுக்கும் இல்லை சரியா நீ வேற வர்றியா இல்லையா”
“வரேன் ஆனா எதுவும் பண்ணக்கூடாது”
“சரி சரி வா” என அவளது கையை பிடிக்க சரண்யா தனது கையை நீட்ட அவளையே வியப்பாகப் பார்த்தான்
”என்ன இது”