(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”டேய் தாஸ் அவன் குடும்ப வாழ்க்கை வாழனும் இப்ப தேவா ஒண்ணும் தனியாள் கிடையாது, சரியா ஒருத்திக்கு ரெண்டு பேரோட அவன் குடித்தனம் செய்யனும் இதுல நீ இந்த வீட்ல இருந்தா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க, இவங்களுக்கும் இடைஞ்சலா இருக்கும் வா வா தினமும் காலையில 10 மணிக்கு வந்து பார்த்துக்க, நைட் 8 மணிக்கு வீடு வந்து சேரு அவங்களும் வாழனும்ல  வா வா போலாம் வா சுப்ரஜாவை கூட்டிட்டு வா எங்கயாவது தொலையப்போறா பாரு” என சொல்ல அவனும் சரியென சுப்ராஜாவை பிடிக்க அவளோ வெளிப்புறமாக ஓட அவளை பிடிக்க எண்ணி தாஸ் ஓடினான். அதைப்பார்த்த கைலாசமும் தேவாவிடம் இரண்டொரு புத்திமதிகளை சொல்லிவிட்டு வெளியே செல்லவும் வாசக்கதவை சாத்தியவன் நிம்மதியாக சோபாவில் வந்து அமர்ந்தான்

   

”அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு” என நினைத்தவன் உடனே ஆசையாக

   

”கீர்த்தனா” என அழைக்க அவளோ வராமல் போகவே சரண்யா வந்தாள்

   

”கூப்பிட்டீங்களா”

   

“நீதான் கீர்த்தனாவா அவள் எங்க”

   

“அவள் சாமான்களை கழுவறா“

   

“ஓ நீ எந்த வேலையும் செய்ய மாட்டியா”

   

“என்ன வேலையிருக்கு செய்றதுக்கு”

   

“வா வந்து என் காலை அமுக்கி விடு வா”

   

“நானா” என ஆச்சர்யமாக பார்க்க சிரித்தான் தேவா, அதற்குள் கீர்த்தனா வந்தாள்

   

”கூப்பிட்டீங்களா சாரி நான் உள்ள வேலையா இருந்தேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.