“எங்கம்மா போற”
“தாத்தா வீட்டுக்கு”
“அங்க நீ போனா அடுத்த நிமிடம் நான் ஜெயிலுக்கு போகனும் பேசாம இரு” என சொல்லும் போதே கைலாசநாதன் அங்கு வந்தார்
”என்ன தேவா என்ன செய்ற?”
“இப்பதான்பா சாப்பிட்டேன்”
“கல்யாணத்துல ஏகப்பட்ட கலாட்டா, அதான் நான் மொய் கொடுக்க மறந்துட்டேன்” என கூலாகச் சொல்லியவர்
”சரி இப்ப கொடுங்க” என தேவா கை நீட்ட
”இந்தா” என அவனிடம் பத்திரங்களை நீட்ட அவனோ அதை வாங்க மறுத்து
”என்ன இது சொத்து பத்திரமா எனக்கு வேணாம்”
“சொத்து இல்லைடா உன்னோட ட்ரான்ஸ்போர்ட் பத்திரம். ஏலத்தில வந்ததை நான்தானே வாங்கினேன். உன் கல்யாணத்துக்கு நான் தர்ற மொய் வாங்கிக்க”
“இப்ப நீங்க தந்தாலும் எப்பவுமே அது உங்க பேர்லதான் இருக்கும், அதனால இது வேணாம் எனக்கு”
“ஏன்டா இப்படி நினைக்கற”
“வேணாம்பா இதுவரைக்கும் நீங்க எனக்குச் செஞ்சதே போதும், என்னை விட்டுடுங்க நான்