(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தாமரையை பத்தி நினைக்கறயே இந்த எண்ணம்தான் உன்கிட்ட எனக்கு பிடிச்சது” என தேவா சொல்ல அதற்கு கீர்த்தி

   

”சாப்பிட்டு போய் பாட்டியை பார்த்துட்டு வரலாம் வர்றீங்களா” என கேட்க

   

”கண்டிப்பா வரேன் போலாம் சரியா”

   

“ம் வாங்க சாப்பிடுவீங்க”

   

“எங்க உன் அண்ணன்”

   

“சாப்பிடறாரு”

   

“நல்லது சரி அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் அதுவரைக்கும் நாம காதல் பண்ணலாமா”

   

“இப்பவே வேணாம் அண்ணா இருக்காரு”

   

“உன் அண்ணன் இனிமே இங்கதான் இருப்பான் நீ வா” என கைநீட்டி அழைக்க அவளோ வெட்கத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்து அவனது கைகளுக்குள் புகுந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள். அவளை தேவா அணைத்துக் கொள்வதைக் கண்ட சரண்யாவோ

   

”கட்டிபிடிக்கறதுதான் காதலா இதையா காதல் பண்ணுன்னு சொன்னாரு. தெரிஞ்சிருந்தா அப்பவே கட்டிப்பிடிச்சிருப்பேனே சரி சரி அப்புறமா அவர் தனியா வர்றப்ப கட்டிப்பிடிச்சி நம்ம காதலை காட்டலாம்” என நினைத்தவள் அங்கிருந்து நழுவி சாப்பிடும் இடம் சென்றாள் அங்கு தாஸ் இருக்கவே அவனையே பார்த்தாள் 

   

அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க அமைதியாக தரையில் அமர்ந்தவள் பார்த்தாள். சாப்பிட என்ன இருக்கிறது என கீர்த்தனா சாதம், சாம்பார், கூட்டு, ரசம், அப்பளம் என செய்து வைத்திருந்தாள். ஒரு தட்டில் அனைத்தும் பரிமாறிக் கொண்டு தாஸை பார்க்க அவனோ அவளையே பார்த்தான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.