என்பது போல சைகை செய்ய
”ட்ரான்ஸ்போர்ட்டா அப்பாகிட்ட இருக்கு அவர்தான் ஏலம் எடுத்தாரு. சரி நாளைக்கு அவர்ட்ட போய் பணத்தை கொடுத்து ட்ரான்ஸ்போர்ட் வாங்கிக்கலாம்” என சொல்ல அவனோ
”பணம் எங்க இருக்கு” என சைகையில் கேட்க
”ம் இருக்கற பணத்தை கொடுக்கலாம் பத்தலைன்னா பேங்க்ல லோன் போடலாம்” என சொல்ல அவனோ அமைதியாக தலையாட்டிக் கொண்டே இருக்க அதைப்பார்த்த சரண்யாவோ
”என்கிட்ட பணம் இருக்கு அதை வைச்சி இழந்தத்தை மீட்டுக்கலாம்” என சொல்ல தேவாவோ
”கீர்த்தனா நீ எதுவும் சொல்லலையே உன் பங்குக்கு நீ எதையாவது சொல்றது”
“என்கிட்ட பணம் இல்லை என்னால உதவ முடியாது. வேணும்னா வீடு கட்ட ப்ளான் வரைஞ்சி தரேன். உங்க கூட வேலை செய்றேன். வேற என்னால என்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்களோ அதை கண்டிப்பா நான் செய்வேன்” என அவள் சொல்ல சரண்யாவுக்கு அவளது பேச்சு வியப்பாக இருந்தது.
”பார்த்துக்க சரண்யா பாரு, பணத்தை தூக்கிப்போட்டு வேலைகளை முடிப்பல்ல நீ, இது போல ஒரு நாளும் உன்னால பேசவோ இல்லை இல்ல நினைக்க கூட முடியாது”
“இல்லை எனக்குப் புரியலை எனக்குத் தெரியலை”
“தெரியலை புரியலை ஆனா கல்யாணம் மட்டும் பண்ணி என்னோட உயிர் எடுப்ப அப்படித்தானே”
“சாரி உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் இப்பவே கிளம்பறேன்”