(Reading time: 34 - 68 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”நான் உங்க ஒய்ப்தானே பார்த்தா தப்பில்லையே”

   

“ஒய்ப்னா அதுபடி நடக்கனும் கீர்த்தனாவை பாரு, காலையில தாமரையோட சேர்ந்து கோயிலுக்கு போய் வந்து டிபன் கூட ரெடி பண்ணிட்டா ஆனா நீ இன்னும் தூங்கற என்ன செய்றது உன்னை”

   

“சாரி எனக்கு தெரியாது இனிமே நான் 7 மணிக்கு எழறேன்”

   

“7 இல்லைம்மா 6 சரியா 6 மணிக்கு எழுந்து தாமரையோட கோயிலுக்கு போ, நல்ல புத்தி வரட்டும் இப்ப எழு எழுந்து ரெடியாகு நான் கோயிலுக்கு போறேன் என்கூட வந்து சேரு” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட நடப்பது கனவா நனவா என அறியாமல் குழம்பினாள்

   

”இவர் என்னை கூப்பிடறாரே எப்படி ஒருவேளை பாசமா கூப்பிடறாரா இல்லை கோயில்லயே என்னை விட்டுட்டு வர பார்க்கறாரா எதுக்கும் ஜாக்கிரதையா போகனும்” என நினைத்து ரெடியாக ஆரம்பித்தாள். இருவரும் குளித்து ரெடியாகி வந்த உடன் சுட சுட இட்லி பரிமாறினார் தாமரை, தாஸ், தேவா, கீர்த்தனா, சரண்யா நால்வரும் சாப்பிட்டு முடித்த உடன் தேவா கீர்த்தனாவிடம்

   

”கீர்த்தனா அழகா ஒரு வீட்டு ப்ளான் வரைஞ்சி வை, ஏற்கனவே நீ வரைஞ்சது இருக்குல்ல அது வேணாம் இப்ப முழுசா பெரிசாவே கட்டிடலாம்”

   

“எதுக்கு பெரிசா நாமதானே இருக்கப் போறோம்” என கீர்த்தனா கேட்க அவன் சரண்யாவை காட்டி

   

”இவளும் இருக்காளே பெரிசா கட்டி இவளை தனியா வைச்சிடலாம்” என சொல்லவே சரண்யாவின் முகம் சுருங்கி போக அவள் அமைதியாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அதைப் பார்த்த தாமரையோ

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.